குடுமியான்மலையில் வேளாண்மைக் கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம்…

விராலிமலை,மார்ச்.23: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் குடுமியான்மலையில் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

முதல் நாள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் கு.சிவசுப்ரமணியன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

பின்னர் விவசாயம் காப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது.இதன் மூலம் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வினை ஊர்பொது மக்களிடத்தில் கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்தினர்.

இரண்டாவது நாளான சனிக்கிழமை குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாணவர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பாதாதைகளோடு முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர்.

பின்னர் மாணவர்கள் குடுமியான்மலையில் உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் திருக்கோவிலில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். கல்லூரி மாணவர்களின் இத்தகைய பணிகளை ஊர்ப்பொதுமக்கள் பாராட்டினர்.

முகாமில் நாட்டுநலப்பணித்திட்ட ஆலோசகர் சுகன்யா கண்ணா,மாணவர் மன்ற ஆலோசகர் முனைவர் அசோகன்,ஸ்டாமின் துணை இயக்குநர் சங கர் ,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் முருகேசன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு முகாமில் வேளாண்மை தொழில்நுட்ப செயல் விளக்கங்கள்,கருத்து பரிமாற்றங்கள் மற்றும் சமுதாய நலப்பணிகள் நடைபெற உள்ளது..முகாமனது மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மார்ச் 28 வரை நடைபெறும்..

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here