சில முக்கியமான “ஆரோக்கிய குறிப்பு”களை தெரிந்துகொண்டு, வாழ்வை வளமாக்கும்.

சில முக்கியமான “ஆரோக்கிய குறிப்பு”களை தெரிந்துகொண்டு,
வாழ்வை வளமாக்கும்.

முக்கியமான ஆரோக்கிய குறிப்புகள்;
1) பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள், தாகம் எடுத்தால் தண்ணீர் குடியுங்கள், குளிர்பானங்களை தவிர்த்து விடுங்கள்.

2) தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள், உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள், ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

3) இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும், தவிர்த்து விடுங்கள்.

4) தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள், விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.

5) ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருந்து சிந்தியுங்கள், உங்கள் ஆற்றல் வெளிப்படும்.

6) டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு, நல்ல புத்தகங்களை படியுங்கள்.

7) குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன்களை கொடுக்காதீர்கள் தேவையற்ற விஷயங்களுக்காக வாட்ஸ்அப் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

8) உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு, உங்கள் பாதை வேறு, அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம்.

9) கடுமையாக உழைக்காதீர்கள்!
உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள், அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

10) கடந்த காலத்தை மறந்து விடுங்கள் முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும், நிகழ்காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.

11) குறுகிய கால இந்த வாழ்க்கையில் யாரையும் வெறுக்காதீர்கள், வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here