Educationtn.com

அரசுப்பள்ளிகளில், நான்கு, ஏழு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் 25ம்தேதி முதல் அடைவு ஆய்வுத் தேர்வுகள் நடக்கிறது.மாணவர்களின் கற்றல் திறன்களைஅளவிடுவதற்கும், அதற்கான பயிற்சி வழங்கவும், அடைவு ஆய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்கள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு இத்தேர்வு நடத்தப்பட்டது. 
பின்னர், அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்தும் நடைமுறை செயல்படுத்தப்பட்டது. கடந்த இரண்டு கல்வியாண்டுக்கு முன்பு வரை, இத்தேர்வு, எட்டு முதல் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே நடந்தது. தற்போது, மூன்றாம் வகுப்பு முதல் உயர்நிலை வரை அனைத்து வகுப்புகளுக்கும் இத்தேர்வு நடக்கிறது.நடப்பு கல்வியாண்டில், அடைவுத்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வது குறித்து பயிற்சி அளிக்க, ‘கற்றல் விளைவுகள்’, தலைப்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாமும்நடந்தது. 
இதன் அடிப்படையில், தற்போது, நான்கு, ஏழு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளுக்கு அடைவுத்தேர்வு நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காம் வகுப்புக்கு, மார்ச், 25ம்தேதி, ஏழாம் வகுப்புக்கு 26ம் தேதி, ஒன்பதாம் வகுப்புக்கு 28ம்தேதியும் அடைவு ஆய்வுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்றுனர்கள் அந்தந்த வட்டாரங்களில் இத்தேர்வை நடத்துகின்றனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here