நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மார்ச் 25 முதல் பயற்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்ப…
ஹைலைட்ஸ்

  • சுமார் 20,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
  • 4,000 பேருக்கு தங்கும் இடம் வசதியும் வழங்கப்படுகிறது.
  • நீட் மற்றும் ஜே.இ.இ. ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு தமிழக பள்ளிக்கல்வி சார்பில் வரும் 25ஆம் தேதி முதல் பயிற்சி தொடங்க உள்ளது.

தமிழக மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாநிலம் முழுவதும் நீட் மற்றும் ஜே.இ.இ. ஆகிய தேர்வுகளுக்கான பயற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதன்படி, 413 இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பயிற்சி மையங்களில் ஏற்கனவே 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பொது தேர்வை முன்னிட்டு இந்தப் பயிற்சிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போது மீண்டும் அந்த பயிற்சிகள் மார்ச் 25ஆம் தேதி முதல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி மையங்களில் சேர சுமார் 20,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 4,000 பேருக்கு தங்கும் இடம் வசதியும் வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here