தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எந்தத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நீங்க பட்டதாரியா? அப்ப வாங்க, ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..!

நிர்வாகம் : வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : கீழ் நிலை உதவியாளர் – 03
ஊதியம் : ரூ.25,200 முதல் ரூ.59,600 வரையில்
கல்வித் தகுதி : ஏதாவதொரு ஓர் பாடப்பிரில் பட்டம் பெற்று ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 31.01.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி : கணக்கு அலுவலர் – 01
ஊதியம் : ரூ.20,600 முதல் ரூ.46,500 வரையில்
கல்வித் தகுதி : ICWAI / ICAI-இல் உறுப்பினராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி : உதவி போக்குவரத்து மேலாளர் – 03
பணி : உதவிச் செயலாளர் – 01
ஊதியம் : மாதம் ரூ.20,600 முதல் ரூ.46,500 வரையில்
கல்வித் தகுதி : ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500.
  • மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :www.vocport.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.03.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.vocport.gov.in/port/userinterface/Recruitment.aspx என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here