பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது. வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற பல தேவைகளுக்கு பான் கார்டு முக்கிய ஆவணமாக இருப்பதால் பல வகைகளில் சிக்கல் ஏற்படும்.

சில நாட்களில் உங்கள் பான் கார்டு முடக்கப்படலாம்! தவிர்க்க ஒரே வழி இதுதான்!
ஹைலைட்ஸ்

  • ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க கடைசி தேதி மார்ச் 31, 2019.
  • வருமானவரித்துறையின் இணையதளத்திலேயே இணைக்கலாம்.
  • ஆதார் எண்ணை இணைக்காத பான் கார்டுகள் இன்னும சில நாட்களில் முடக்கப்படலாம்.

மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க மார்ச் 31, 2019 வரை அவகாசம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

Image result for pan card

இந்நிலையில், வரும் 31ஆம் தேதிக்குப் பின் ஆதார் எண்ணும் பான் கார்டும் இணைக்கப்படவில்லை என்றால் அந்த பான் கார்டு முடக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது. வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற பல தேவைகளுக்கு பான் கார்டு முக்கிய ஆவணமாக இருப்பதால் பல வகைகளில் சிக்கல் ஏற்படும்.

இதனைத் தவிர்க்க பான் கார்டுடன் ஆதார் எண்ணை மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைத்துவிடுவது நல்லது. கடந்த ஆண்டு மட்டும் 11.44 லட்சம் பான் கார்டுகள் பல்வேறு காரணங்களுக்காக முடக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2018 மார்ச் நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 33 கோடி பான் கார்டுகளில் 16.64 கோடி கார்டுகளில் மட்டுமே ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இணைக்கவும் சரிபார்க்கவும்

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வருமானவரித்துறையின் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதளத்துக்குச் சென்று Link Adhar பக்கத்துக்குச் செல்லவும்.

ஆதார் எண் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற முகவரிக்குச் செல்லவும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here