Educationtn.com

அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இனிமேல் அவுட்சோர்சிங் மூலமே நியமிக்கப்படுவார்கள் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

2010-ல் சிறப்பு காலமுறை ஊதியத்தில் அரசுப் பள்ளிகளில் நியமிக்கபட்ட துப்புரவாளர்கள், காலமுறை ஊதியம் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற தீர்ப்பின்படி 2,213 துப்புரவுப் பணியாளர்களில் தற்போது பணியில் உள்ள 1,694 பேருக்கு மட்டும் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்படுவதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இனி வரும் காலங்களில் 2012-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி உருவாக்கப்பட்ட அனைத்து துப்புரவாளர் பணியிடங்களும் நிரப்பப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமிக்கப்பட்ட 2,213 துப்புரவுப் பணியாளர்களின் ஓய்வுக்குப் பின் அந்த பணியிடங்கள் நிரப்பப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் துப்புரவுப் பணியிடங்கள் அவுட் சோர்சிங் மூலமாக மட்டுமே நிரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here