உங்கள் கை, கால் முட்டிகள் கறுப்பாக தோற்றமளிக்கிறதா? இதோ,
வெண்மையாக்க சில டிப்ஸ் !

பலர் உடலை அழகாக வைத்து கொள்ள நிறைய முயற்சிகளை எடுப்பார்கள். முழங்கையை கண்டு கொள்வதே இல்லை. இதனால் பல இடங்களில் இறந்த செல்கள் தேங்கி முழங்கை கருப்பாகவும், மென்மையின்றியும் அசிங்கமாக இருக்கிறது. முழங்கையில் உள்ள கருமை நீங்க சில வழிமுறைகள் :

* கடலை மாவை, தயிருடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
கடலை மாவை எலுமிச்சை சாற்றில் கலந்து பேஸ்ட் செய்தும் பயன்படுத்தலாம்.

* கற்றாழை ஜெல்லை தேனுடன் சேர்ந்து கலந்து, முழங்கையில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

* மஞ்சள் தூளை, தேன் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து,பின் நீரினால் தேய்த்து கழுவ வேண்டும்.

* 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் துடைக்க
முழங்கையில் வறட்சி நீங்கி முழங்கை மென்மையாக இருக்கும்.

* பேக்கிங் சோடாவை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, தேய்க்க வேண்டும்.

* சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயிலை பேஸ்ட் போல் கலந்து, முழங்கையில் தடவி 5 நிமிடம் தேய்த்து, ஊற வைத்து, கழுவ வேண்டும். இதன் மூலம் முழங்கையில் உள்ள கருமை மறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here