நாம் உண்ணும் உணவுகள், மருந்துப் பொருட்களில் குறிப்பிட்ட காலம் வரை பயன்படுத்தலாம். அதற்கு மேல் காலாவதியாகி விட்டால் பயன்படுத்தக் கூடாது.உடலுக்கு கெடுதல் தரும் என்று கூறுவார்கள்.ஆனால், கீழே உள்ள உணவுப் பொருட்களுக்கு காலாவதி நாட்கள் என்று எதுவும் தேவையில்லை. சில வகை உணவு பொருட்கள் டின், ஜாடி மற்றும் பைகளில் அடைத்து விற்கப்படுபவை. அவைகளை, பயன்படுத்த வேண்டிய தேதிக்குப் பின்பும் பயன்படுத்தலாமா?பயன்படுத்தினால் நமக்கு கெடுதல் தருமா?தராதா? என்ற கேள்வி எழும்.

ஆனால், அவ்வாறு கூறப்பட்டுள்ள ஒரு சில உணவுகளை காலாவதி தேதிக்குப் பின்பு தூக்கி எறிந்து விட்டு கடைக்குச் சென்று புதிதாக ஒன்று வாங்க வேண்டிய அவசியமில்லை. இதனால் நீங்கள் உணவுப் பொருட்களை வீணாக வெளியே வீசுவதையும், புதிய உணவுப் பொருட்களுக்கு செலவிடும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

தேன்

ஒரு சில காலத்திற்குப் பின்பு தேன் தனது நிறத்தையும் படிகத்தையும் மாற்றும். ஆனாலும் அதன் பின்பும் அதனை நாம் சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஒன்றும் நேராது.உடல் நலத்திற்கு நல்லது தான். அடர்த்தியாக/படிகமாக மாறிய தேனை சூடான வென்னீரில் சேர்க்க, தேனின் திரவ நிலையை நாம் பெற்றுக் கொள்ள இயலும்.

அரிசி

அரிசிக்கு காலாவதி தேதி குறிப்பிட்டு சாக்கு/பிளாஸ்டிக் பையில் தைத்து விற்பனைக்கு விடுவது சரியல்ல. நீங்கள் பயன்படுத்தும் அரிசியை உலர்ந்த நிலையில், குளிர்ச்சியான இடத்தில் வைத்து பயன்படுத்தினால், மேற்கூறிய அரிசியை சுமார் 20 ஆண்டு காலம் வரை உணவாக சாப்பிட்டுக் கொள்ள முடியும். மேற்கூறிய முறையில் நூடுல்ஸ் மற்றும் பாஸ்தா வகை உணவுகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

டின்னில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் காய்கறிகள்

டின்னில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் காய்கறிகளை, டின்னைத் திறந்து விட்டால், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் காய்கறிகளானது கெட்டுப் போய் விடும்.ஆனால் டின்களை நீங்கள் திறக்காமலேயே வைத்திருந்தால், நாற்பது வருடங்கள் எனினும் அவை உண்ணத் தக்கவையாக அமையும்.

வினிகர்

ஒருமுறை வாங்கும் வினிகரை நீங்கள் ஆயுள் முழுக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால், நீங்கள் பெரிய அளவு வினிகர் பாட்டிலை வாங்க தயங்க வேண்டியதில்லை.

சோள மாவு

நீங்கள் சமையலறை அல்லது மளிகை சரக்குகள் வைத்திருக்கும் இடத்தில் வைத்திருக்கும் ஆச்சர்யமான பொருள் எது என்றால் அது சோள மாவு தான். ஒரு சிலர் தங்கள் தினசரி தேவையில் சோள மாவை தவறாமல் பயன்படுத்துவார்கள்.ஒரு சிலர் அதனை அப்படியே கப்போர்ட்டில் ஒரு ஓரமாக வைத்து விடுவார்கள். நீண்ட நாட்கள் சோள மாவை பயன்படுத்தாமல் இருந்தாலும் அது கெட்டுப் போவதில்லை. உங்களது கொள்ளுப் பேரன் காலம் வரைக்கும் கூட கெடாமல் பயன்படும் ஒன்றாக உள்ளது.

நிலக்கடலை வெண்ணெய்

பீநட் பட்டர் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் நிலக்கடலை வெண்ணெய் சாண்ட்விச் ஆனது வாங்கிய பின்பு இரண்டு மூன்று ஆட்கள் ஆனாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை.

உங்கள் மூக்கின் நுகர்வு, வாய் மூலம் சுவை உணர்வு போன்றவைகளினால் வித்தியாசமான மணமோ (நாற்றம்), மோசமான தோற்றமாகவோ உணவுப் பொருட்கள் மீது அறியப்பட்டால், அதனை நீங்கள் சாப்பிடாமல் தூக்கி வீசி எறிய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here