தேர்வு நாளன்று கடைபிடிக்க வேண்டிய நேரக் கட்டுப்பாடு

(முதல் நான்கு தேர்வுகள் மட்டும்)
11.45 மணி:முதன்மை கண்காணிப்பாளர்,துறை அலுவலர் தேர்வு மையத்திற்கு வருகை புரிதல்
12.45 : அறை கண்காணிப்பாளர் தேர்வு மையத்திற்கு வருகை புரிதல்(தேர்வறை ஒதுக்கீடு குலுக்கல் முறை மற்றும் விடைத்தாள்களை பரிசோதித்து தயார் நிலையில் இருத்தல், அலைபேசிகளை ஒப்படைத்து கையெழுத்து இடுதல்)
1.25 :வினாத்தாள் கட்டுகளை அலமாரியில் இருந்து வெளியே எடுத்தல்
1.30 : வினாத்தாள் கட்டுகளை அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தல்
1.40 : அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு அறைக்கு செல்லுதல்
1.45 : தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைக்கு செல்லுதல். அறை கண்காணிப்பாளர்கள் தேர்வர்களை பரிசோதித்து தேர்வறையில் அனுமதித்தல். HALL TICKET பரிசோதித்தல்.
1.55 :அறை கண்காணிப்பாளர் வினாத்தாள்  கட்டுக்களை தேர்வர்கள் முன்னிலையில் பிரித்து வினாத்தாள் எண்ணிக்கை சரி பார்த்து  மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் வைத்திருத்தல்
2.00 : வினாத்தாள்களை மாணவர்களுக்கு வழங்குதல்
2.10 : விடைத்தாள்களை மாணவர்களுக்கு வழங்குதல்
2.15 : தேர்வர்கள் தேர்வு எழுத ஆரம்பித்தல் &  துறை அலுவலர்  வருகை புரியாத தேர்வர்களின் வினாத்தாள் மற்றும் விடைத் தாள்களை சேகரித்து பயன்படுத்தாத வினாத்தாள்களை அலமாரியில் வைத்து பூட்டி சீல் இடுதல்
2.45/3.15/3.45/4.15 தேர்வு நேரத்தை அறிவிக்கும் மணி அரை மணிக்கு ஒருமுறை
4.40 :எச்சரிக்கை மணி
4.45 : தேர்வர்களிடம் இருந்து அறை கண்காணிப்பாளர்கள் விடைத்தாள்களை சேகரித்தல்.
தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக சென்று விடைத்தாள்களை உரிய அறிவுரைகளை பின்பற்றி ஒப்படைத்தல்.
CSD படிவங்களில் கையெழுத்து  இடுதல். முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர் உரிய அறிவுரைகளை பின்பற்றி விடைத்தாள் சிப்பங்களை உரிய முறைப்படி தயார் செய்தல். வழித்தட அலுவலரிடம் ஒப்படைக்க தயார் நிலையில் இருத்தல்.
5.30: வருகை புரியாத தேர்வர்களின் விபரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல்
Source: தேர்வுத்துறை கையேடு

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here