பள்ளி மாணவர்களின் கல்வித்தர மேம்பாட்டை அளவிடும் வகையில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் அடைவுத் தேர்வு, வரும், 28ல் நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, எட்டு யூனியன்களில், தலா, நான்கு பள்ளிகள் என, 32 பள்ளிகளை சேர்ந்த, 640 மாணவ, மாணவியர் கற்றல் அடைவுத் தேர்வை எழுதுகின்றனர். தேர்வுப்பணியில், ஆசிரியர் பயிற்றுனர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சி.இ.ஓ., ராமசாமி தலைமையில், கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். இதேபோல், நான்கு, ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 25, 26ல் கற்றல் அடைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here