மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண் டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

கேந்திரிய வித்யாலயா உள் ளிட்ட மத்திய அரசுபள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் (சிடெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. அதன் படி நடப்பாண்டுக்கானசிடெட் தேர்வு ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான விண்ணப் பப் பதிவுwww.ctet.nic.inஇணைய தளத்தில் கடந்த பிப்.5-ல் தொடங்கி மார்ச் 5-ம் தேதியுடன் முடிந்தது. ஆனால், கடைசி நாளில் தொழில் நுட்பக் கோளாறால் இணையதளம் முடங்கியதால் தேர்வுக்கு விண் ணப்பிக்க முடியவில்லை.

இதையடுத்து சிடெட் தேர்வுக்கு மார்ச் 12-ம் தேதி வரை விண்ணப் பிக்க கூடுதல் அவகாசம் வழங்கி சிபிஎஸ்இ உத்தரவிட்டது. தேர்வர் கள் தொடர்ந்து ஆர்வத்துடன் விண் ணப்பித்து வருகின்றனர். இந்த தேர்வுக்காக நாடு முழுவதும் 97 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழகத் தில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கிடையே சிடெட் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப் பிக்க நாளை (மார்ச்12) வரையே அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தேர்வர்கள் பயன்படுத் திக் கொள்ள வேண்டும். இனி கால அவகாசம் நீட்டிக்கப்படாது என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here