சென்னை: 11 ஆம் வகுப்பு கணக்குப் பாடத் தேர்வு முற்றிலும் வித்தியாசமாக இருந்ததாகவும், கேள்வித்தாள் வடிவமைப்பு மிகவும் குழப்பமாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் தற்போது பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே தமிழ் மற்றும் ஆங்கில பாடத் தேர்வுகள் எவ்வித பிரச்னையும் இன்றி நடந்து முடிந்த நிலையில், இன்று கணக்கு வினாத்தாள் மிகவும் குழப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் முதலில் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தேர்வினை எழுதிவிட்டு வந்த மாணவர்கள், நினைத்த மதிப்பெண்ணை எடுக்க முடியாது என்று சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 
இதுகுறித்து கணக்கு ஆசிரியர் ஒருவர் கூறியதாவது, “11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஒரு மதிப்பெண் கேள்வியில் 10 பாடப்புத்தகத்தில் இருந்து நேரடியாகவும், 10 வினாக்கள் உள்பகுதியில் இருந்தும் கேட்கப்பட்டுள்ளது. 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள், மாணவர்கள் முழுவதும் படித்து தெரிந்து இருந்தால் மட்டும் பதலளிக்கும் வகையிலும், சமன்பாடுகளின் அடிப்படையிலும் கேட்கப்பட்டிருந்தது. இதனை நன்றாக படித்த மாணவர்கள் மட்டுமே போட முடியும். 5 மதிப்பெண் வினாக்கள் மட்டுமே எளிதாக இருந்தன,” என கூறினர்.
பொதுத் தேர்வின் போது மாணவர்கள் கேள்வித்தாள் வடிவமைப்பைக் கண்டு குழப்பம் அடையாமலும், அதிர்ச்சி அடையக் கூடாது என்பதற்காகத்தான் பொது தேர்வு கேள்வித்தாள் வடிவமைப்பு மாதிரியில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மாநில அளவில் பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. ஆனால் அதனை மாற்றி புதிய வடிவில் கேட்டுள்ளது மாணவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here