அண்ணா பல்கலை., நடத்திய ரீவேல்யுவேஷன் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 2018ம் ஆண்டு நவம்பர்/டிசம்பர் மாதங்களில் தேர்வு எழுதிய மாணவர்கள் annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் தங்கள் பதிவெண்களை பதிவிட்டு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

aucoe.annauniv.edu, coe1.annauniv.edu மற்றும் annauniv.edu என்ற தளங்களிலும் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். இத்தேர்வில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். முந்தைய தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் திருப்தி அடையாததால் இந்த தேர்வு நடத்தப்பட்டது.

முடிவுகளைத் தெரிந்துகொள்ள படிப்படியான விவரங்கள்

அண்ணா பல்கலை., தளத்துக்குச் செல்லவும்

ஹோம்பேஜில் உள்ள ரிசல்ட் என்னும் பாக்ஸை கிளிக் செய்க
புதிய பக்கம் திறக்கும்.
டிசம்பர் 2018 ரீ வேல்யுவேஷன் ரிசல்ட் என்ற லிங்க் இருக்கும். அதனை கிளிக் செய்க.
பதிவெண் கொண்டு லாகின் செய்க
முடிவுகள் வெளியாகும்.
இந்த முடிவை பிரிட்ண்ட் செய்து கொள்வது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here