கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், குரூப் – 4 தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் – 4 தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது. பயிற்சியில், முன் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட வினாத்தாள், தேர்வுக்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படும். வாரந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். சேர விரும்புவோர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு, நேரில் வந்து கலந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here