புரதச்சத்து அதிகம் நிறைந்த முட்டையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது, நம் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதா என்பது குறித்து பார்ப்போம்.

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லதா?

காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான உணவுப் பொருளை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அதற்கு தினசரி ஒரு முட்டை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்?

முட்டையில் உள்ள புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்கள் எலும்புகள், மற்றும் பற்களுக்கு அதிக வலிமையை சேர்க்கிறது.

முட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் போன்றவை கண் புரை போன்ற கண்கள் தொடர்பான நோய்களை தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நம் அன்றாட உணவில் தினம் ஒரு முட்டை எடுத்துக் கொள்வதன் மூலம் அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம்.

ஆய்வின் மூலம் ஒரு வாரத்திற்கு ஆறு முட்டைகளை சாப்பிட்டால், ரத்தத்தின் அளவு ஒரே நிலையில் இருக்கும் என்பதை கண்டுபிடிக்கப்பட்டது.

கெட்ட கொழுப்புகள் மூலம் நம் உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் முட்டையில் உள்ள நல்ல கொழுப்புகள் எவ்விதமான உடல் நலக் கோளாறுகளையும் ஏற்படுத்தாது.

யாரெல்லாம் எத்தனை முட்டையை சாப்பிடலாம்?

ஒவ்வொருவரின் உடல்வாகு மற்றும் உடல் உழைப்பிற்கு ஏற்றது போல வேறு விதமான உணவு முறைகள் தேவைப்படும்.

உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள், ஒரு நாளைக்கு முட்டையின் 6 வெள்ளைக் கருவையும், 2 மஞ்சள் கருவையும் சாப்பிடலாம். இதனால் உடலின் சதைகள் நன்கு வலிமையாகும்.

உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு ஒன்று என்ற விதத்தில் சாப்பிட்டாலே போதும். ஏனெனில் மற்ற உணவுகளில் இருந்தும் சத்துகள் கிடைப்பதால், அதிக முட்டை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரைநோய் உள்ளவர்கள், முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் முட்டை சாப்பிடுவதால், இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

முட்டையை எப்படி சாப்பிடுவது நல்லது?

முட்டையுடன் கோதுமை பிரெட் மற்றும் காய்கறிகள் ஆகியவை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது.

ஆனால் முட்டையுடன் இறைச்சி, சீஸ், வெள்ளை பிரெட் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது, சுவையாக இருக்கும். ஆனால் அது ஆரோக்கியமானது இல்லை.

முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே ஆரோக்கியமானது தான். மஞ்சள் கருவை நீக்கிய ஆம்லெட் அல்லது வேகவைத்த முட்டையாக கூட சாப்பிடலாம்.

குறிப்பு

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதுடன், உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வந்தால், இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், மகிழ்ச்சியான வாழ்வை தொடரலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here