திருக்குறள்

அதிகாரம்:வெஃகாமை

திருக்குறள்:180

இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு.

விளக்கம்:

பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அவ்வாறு அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பதே வாழ்வில் வெற்றியைக் கொடுக்கும்‌.

பழமொழி

We live in deeds, not in years

எத்தனை நாள் ‌வாழ்ந்தான் என்பதை விட எப்படி வாழ்ந்தான் என்பது தான் முக்கியம்.

இரண்டொழுக்க பண்புகள்

 1. எனது உணவானது விவசாயி, பாதுகாப்பவர், விற்பவர் மற்றும் சமைப்பவர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உலகில் உணவு  இல்லாமல் நிறைய பேர் இருக்கும் போது உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி

வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்.

  – ஜவஹர்லால் நேரு

பொது அறிவு

1.  பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

M.S. சுவாமிநாதன்

2. வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

 வர்கீஸ் குரியன்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

பழைய சோற்று கஞ்சி

1. பழஞ்சோறு மனிதருடைய உடலின் செயற்பாட்டுக்குத் தேவையான பல கனிமப் பொருட்களை அதிக அளவில் கொண்ட காலை உணவாகப் பயன்படலாம் என்பதைப் பல ஆய்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன.

2.  பழஞ்சோற்றில், சோடியம், பொட்டாசியம், கல்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற தனிமங்களைக் கொண்ட கனிமப்பொருட்கள் அடங்கியுள்ளன. அத்துடன், மனிதரின் தைராயிட் சுரப்புநீரைக் கட்டுப்படுத்துவதன் மூலம், வளர்ச்சிக்கும், வளர்சிதைமாற்றத்துக்கும் உதவும்.

3. செலெனியம் என்னும் தனிமமும் சிறிய அளவில் பழஞ்சோற்றில் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

4. பழைய சோற்றில் நோயெதிர்ப்பிற்கான காரணிகள் அதிகம் உள்ளது. இவற்றை உட்கொள்ளும் போது, அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், உடல் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதோடு, உடலைத் தாக்கும் நோய் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்கின்றன.

English words and Meaning

Lonely.    துணையற்ற,              தனித்த
Dauntless. அஞ்சாத, தைரியமுள்ள
Aliment.   ஆகாரம் ,உணவு
Bargain.   பேரம் பேசுதல்
Efficacy.
நலம்,சக்தி,பயன்

அறிவியல் விந்தைகள்

நீரகக்கரிமம்
நீரகக்கரிமம் அல்லது
 ஹைட்ரோகார்பன்) என்பது கரிமம் (C), நீரியம் (H) அணுக்களால் ஆன வேதிச் சேர்மங்களைக் குறிக்கும் *நீரகக்கரிமங்கள் கரிம அணுக்களை பிணைச் சட்டமாகக் கொண்டு நீரிய அணுக்கள் இச்சட்டத்துடன் இணைந்துள்ளன. *தீப்பற்றி எரியக்கூடிய தன்மை கொண்ட நீரகக்கரிமங்களே இயற்கை எரிபொருட்களான பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவற்றில் காணப்படும் முதன்மைக்கூறு ஆகும். *இயற்கையில் மிகுந்திருக்கும் நீரகக்கரிமம் சாணவளி ஆகும்.
* இவை நிறைவுற்ற ஹைடரோகார்பன்கள், நிறைவுறா ஹைட்ரோ கார்பன்கள் என இரு வகைப்படும்.

Some important  abbreviations for students

* IAS    –  Indian Administrative Service

* IPS.  –   Indian Police Service

நீதிக்கதை

ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

“ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்”

அதன் எஜமானன் கூறினான்.

“பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்”

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.

இன்றைய செய்திகள்
11.03.2019

* தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

* தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தான் இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

* ஆங்கிலேயர் ஆட்சியில் ஏப்ரல் 13, 1919-ல் பஞ்சாபின் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலையில் சுமார் 1600 பேர் கொல்லப்பட்டனர். இதன் நூறாவது நினைவு நாள் வருவதை முன்னிட்டு பிரிட்டிஷ் அரசு இந்த படுகொலைக்கு மன்னிப்பு கேட்கத் தயாராகிறது.

* மொகாலில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் ஹேண்ட்ஸ்கோம்ப், டர்னர் அதிரடியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

* பின்லாந்து ஜிபி குத்துச்சண்டை அரையிறுதிக்கு  6 இந்திய வீரர்கள் முன்னேறியுள்ளனர்.

Today’s Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸 The Election Commission announced that the election will be held on April 18 in Tamil Nadu and Puducherry .counting will be on 23rd May

🌸The Election Commission today announced that only 18 constituencies in the 21 legislative constituencies in Tamil Nadu will be included in this Lok Sabha elections.

🌸 1600 people were killed in Jallianwala in Punjab in April 13, 1919. The British government is preparing to apologize for this assassination on the occasion of its hundredth anniversary.

🌸In the 4th one-day match Australia won against India by 4 wickets.

🌸6 Indian players have advanced to the semi-finals of the Finland GB Boxing Federation.

Prepared by
Covai women ICT_போதிமரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here