தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படும் உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடர்பாக, ஆட்சியர் சு. சிவராசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டம், துறையூர் டாப்செங்காட்டுப்பட்டி அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான விளையாட்டுத்திறன் மேம்பாட்டு சிறப்பு மையம் தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி மையத்திற்கு தற்காலிக அடிப்படையில் மாதம் ரூ. 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் ஒரு உடற்பயிற்சி இயக்குநர் மற்றும் மாதம் ரூ.8 ஆயிரம் தொகுப்பூதியத்தில் இரு உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த பணியிடங்களுக்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..

உடற்கல்வி இயக்குநர் பணியிடத்துக்கு இளங்கலை பட்டபடிப்பும் மற்றும் உடற்கல்வி பாடத்தில் முதுகலைப்பட்டப்படிப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கு இளங்கலை பட்டபடிப்பும் மற்றும் உடற்கல்வியியல் பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வுக்குழுவால் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நியமன ஆணைகள் வழங்கப்படும். .

பழங்குடியினத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை, துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் மார்ச் 27 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here