அதிர்ச்சி – கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019-ல்

தொடக்க‍த்தில் யாஹு பிகவும் பிரபலமானது அதன்பிறகு வந்த

கூகுள் மக்க‍ள் மத்தியில் பிரபலமடைந்து, இணைய உலகின் ஜாம்வானாக கூகுள் நிறுவனம் இருந்து வருகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவையை அறிமுகப்படுத்தியது. கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூடியூப் சேவைகளுடன் ஒருங்கிணைத்து இயக்கும் வகையில் கூகுள் ப்ளஸ் தொடங்கப் பட்ட காலத்தில் இந்த சேவையை அதிக பயனாளர்கள் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் நாளடைவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு மத்தியில் கூகுள் பிளஸால் போட்டியிட முடியவில்லை. இந்நிலையில் கூகுள் பிளஸ் சேவைக்கு 2019, ஏப்ரல் 2ஆம் தேதி அன்று மூடுவிழா நடத்த‍விருப்பதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது. தனது பயனாளர்ளர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமாக அவர்க‌ளின் தகவல்களை பதிவிறக்கம் செய்து, சேமித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ள‍து. இதனால் கூகுள் ப்ளஸ் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்து ள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here