தமிழக அரசு ஊழியர்கள் நண்பர்களிடம் கடன் வாங்க நிபந்தனைஅரசாணை வெளியீடு

தமிழக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உறவினர்களிடம் இருந்தும், சிறப்பு நிகழ்ச்சிகளான திருமணம், திருமண நாள், பிறந்த நாள் விழாக்கள், மதப்பண்டிகைகள், இறுதிச்சடங்குகள் போன்ற நாட்களில் தமிழக அரசு ஊழியர்கள் பரிசாகப் பெறக்கூடியவற்றின் மதிப்பு ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் இருக்கக்கூடாது. அந்த வகையில் பெறப்பட்ட பரிசுகள் குறித்த விவரத்தை அரசுக்கு ஒரு மாதத்துக்குள் தகவலாக தெரிவிக்க வேண்டும்.
பரிசாக பெறக்கூடிய மொத்த தொகைகளின் மதிப்பு, ரூ.10 லட்சம் அல்லது ஆறு மாத ஊதியம் ஆகியவற்றில் எது குறைவோ அந்த தொகையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறையில் சில சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்டது. எனவே, சில மாற்றங்கள் செய்யப்பட்டு உத்தரவிடப்படுகிறது. அதன்படி, அரசு ஊழியர்கள் தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் இருந்து தனிப்பட்ட முறையில் வட்டியில்லாத கடனாக ரூ.5 லட்சம் வரை வாங்கிக்கொள்ளலாம். இந்த தொகையை அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவோ அல்லது ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டை வாங்கவோ அல்லது காலிமனையில் வீடு கட்டிக்கொள்ளவோ மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here