இந்திய குடிமக்கள் அனைவரின் அடையாளமாக அமையப்பெற்ற ஆதார் அடையாள அட்டை, இன்று அனைத்துவிதமான அரசு நலத்திட்டங்கள், உதவிகள், சிம்கார்ட்கள், கேஸ் இணைப்பு, வங்கிக் கணக்குகள் தொடங்க என அனைத்திற்கும் தேவைப்படும் ஒன்றாகும்.

பல்வேறு தனியார் நிறுவனங்கள் வேலை பார்ப்பவர்களுக்கு அடையாள அட்டையாக ஆதார் கார்ட் நகலை கேட்டு வாங்குவதையும் கூட வழக்கமாக வைத்துள்ளன.

e aadhaar download

ஆதார் கார்ட்களில் ஒருவரின் பெயர், பிறந்த தினம், பாலினம், முகவரி, தொலைபேசி எண் என்று அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும். தயாரிக்கப்ப்பட்ட ஆதார் அட்டைகள் பயனாளிகளுக்கு தபால் மூலம் அனுப்படும்.

ஆனால் எப்போது கைக்குக் கிடைக்கும் என்ற கவலை அனைவருக்கும் இருக்கும் ஒன்று. உங்களுக்கான ஆதார் கார்ட் தயாரான நிலையில் உங்களுக்கு யூனிக் ஐடெண்டிபிகேஷன் அதாரிட்டி ஆஃப் இந்தியாவில் இருந்து குறுஞ்செய்திகள் அனுப்புவார்கள். அதனை வைத்துக் கொண்டே நீங்கள் உங்களின் ஆதார் கார்டை டவுன்லோடு செய்யவும் இயலும்.

Image result for aadhar card

இ-ஆதார் கார்ட் டவுன்லோடு செய்வது எப்படி ?

UIDAI இணையத்திற்கு : //uidai.gov.in/ செல்லவும்

கெட் ஆதார் என்ற தலைப்பின் கீழே இருக்கும் டவுன்லோடு ஆதார் என்பதை க்ளிக் செய்யவும்

அல்லது //eaadhaar.uidai.gov.in/ என்ற இணையத்திற்கு செல்லவும்

அதில் உங்களின் 12-டிஜிட் ஆதார் அடையாள அட்டை எண்ணை உள்ளீடாக தரவும்

ஒன் டைம் பாஸ்வேர்ட் உங்களின் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்

அதில் குயிக் சர்வே என்பதை ஃபில் செய்து வெரிஃபை அண்ட் டவுன்லோடு என்ற ஆப்சனை க்ளிக் செய்தால் உங்களின் இ-ஆதார் கார்ட் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here