விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலத்தில் வரும்13ம் தேதி ஆசிரியர் தகுதித்தேர்விற்கானஇலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்விற்கு (டி.இ.டி.,) வரும் 13ம் தேதி முதல் இங்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவர்கள், தாங்கள் இத்தேர்விற்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன் விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை வரும் 12ம் தேதிக்குள் நேரடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here