தஞ்சையில் தனியார் மருத்துவமனை முழு காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்று நிராகரித்து, பணத்தை கட்டச் சொல்லி மிரட்டிய  பொழுதும்…*


ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் சிகிச்சைக்கான தொகை ரூ.2,01,781 முழுவதையும் NHIS திட்டத்தின் மூலம் காப்பீட்டுத் தொகையாக பெற்ற ஆசிரியர் திரு.சதீஸ்குமார் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சிப் பதிவு..*

_*தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், தளிகைவிடுதி உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் சதீஸ்குமார் ஆகிய நான்,*_

  எனது தந்தைக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டேன்..

மருத்துவமனை நிர்வாகம் ரூ.75,600 மட்டுமே காப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளது எனவே மீதமுள்ள தொகையை கட்ட வேண்டும் என்று நிர்பந்தித்த சூழலில்..

*TNPTF தஞ்சை மாவட்ட பொருளாளர் திரு.மதியழகன் மற்றும் திருவோணம் TNPTF வட்டாரச் செயற்குழு உறுப்பினர் திரு.தேவராஜன் ஆகிய இருவரும் முழு காப்பீட்டுத் தொகை கிடைத்தால் தான் டிஸ்சார்ஜ் செய்வோம் என்ற உறுதியுடன் அவர்கள் எடுத்த தொடர் முயற்சியின் காரணமாகவும், இறுதி வரை உறுதுணையுடன் உடனிருந்து, விருதுநகர் மாவட்ட TNPTF பொருளாளரும், NHIS திட்ட மாநில ஒருங்கிணைப்பாளருமான திரு.செல்வகணேசன் அவர்களை தொடர்புகொண்டு*

_இரண்டாம் கட்டமாக ரூ.26,300-ம்,_

_மூன்றாம் கட்டமாக ரூ.99,881-ஐ பெற்று_

*இறுதியாக முழு மருத்துவ செலவு ரூ.2,01,781-ஐயும் காப்பீட்டுத் தொகையாக பெற்றுத் தந்தனர்..*

*அதுமட்டுமின்றி நான் முன் தொகையாக கட்டிய ரூ.16,944-ஐயும் திரும்ப பெற்ற பின்னரே _(ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல்)_ மிகுந்த மன நிறைவுடன் வீடு திருப்பினேன்..*

*_NHIS திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சை மேற்கொள்ளலாம்_* என்ற விழிப்புணர்வை எனக்கு மட்டுமல்ல, என் மூலமாக நம் அனைவருக்கும் ஏற்படுத்திய மதியழகன், தேவராஜன் மற்றும் செல்வகணேசன் ஆகிய ஆசிரியர்களுக்கும் *NHIS திட்டத்திற்காக மாநில அளவில்  ஒருங்கிணைப்பாளர் குழுவினை நிர்வகித்துவரும் TNPTF மாநில மையத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்..*

*கடுமையான மன நெருக்கடியில் இருந்த எனக்கு கடந்த ஒரு வாரமாக ஆறுதலும், ஆதரவும் தந்த திருவோணம் ஆசிரிய நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்….*

***************************

“இது குறித்து ஆசிரியர் திரு.தேவராஜன் அவர்கள் கூறுகையில்…”

கட்டிய முன் பணம் 16,944-ல் ரூ.434 மதிப்பிலான கட்டண ரசீதை ஆசிரியர் சதீஸ் அவர்கள் தொலைந்துவிட்டார்..

ரசீதே கூட இல்லாமல் அந்த பணத்தையும் மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் திரும்ப வழங்கியது குறிப்பிடத்தக்கது..

மீண்டும் தொடர் சிகிச்சைக்காக எங்களிடம் தான் வர வேண்டும் எனவே மீதத்தொகையை கட்டிவிட்டு டிஸ்சார்ஜ் செய்யுங்கள் என்று முதலில் அச்சுறுத்தும் வகையில் பேசிய மருத்துவமனை நிர்வாகம்..

இறுதியாக நமது அடுத்த கட்ட நகர்வினால் பதறிப்போய்..

நாங்கள் எந்தவித கட்டணமும் வசூலிக்கவில்லை என்ற ஒப்புதல் கடிதத்தை மட்டும் கொடுத்துவிட்டு நீங்கள் இதுவரை செலவு செய்த பணம் முழுவதையும் வாங்கிச் செல்லுங்கள் என்று பணிந்தது..

(இறுதியில் ஆசிரியர் சதீஸ் அவர்களுக்கு மன உளைச்சலினால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க, அவரை மருத்துவரே கட்டித் தழுவி சாப்பாடு வாங்கி வரச் சொல்கிறோம் சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள் என மன்றாடிய மருத்துவமனை நிர்வாகம்)

மிரட்டும் தோனியில் பேசிய மருத்துவமனை நிர்வாகத்தை இறுதியில் பணிய வைத்த பெருமை திரு.செல்வகணேசன் அவர்களையும் TNPTF மாநில மையத்தையுமே சேரும்….

(டிஸ்சார்ஜ் ஆகாமல் மருத்துவமனையில் இருக்கும் பொழுது மட்டுமே முழு தொகையையும் பெற இயலும் என்பது குறிப்பிடத்தக்கது)

NHIS தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவினை விரைவில் பதிவு செய்கிறேன் தோழர்களே..

தோழமையுடன்,
தேவராஜன்.
தஞ்சாவூர்..

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here