புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான பேச்சு,கட்டுரை,ஓவியப் போட்டிகள்

புதுக்கோட்டை: மார்ச்.9 : புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் சார்பில் பெண் கல்வி,இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு உணர்த்தும் விதமாக மாவட்ட அளவிலான பேச்சு,ஓவியம் கட்டுரைப் போட்டிகள் அருள்மிகு பிரகதம்பாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்றது..

போட்டியினை தொடங்கி வைத்து புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.ராகவன் பேசியதாவது:பெண்
கல்வி மற்றும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு பேச்சு,கட்டுரை,ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது..பள்ளி மாணவர்களிடம் ஒரு திட்டத்தை கொண்டு சென்றால் அத்திட்டம் பற்றிய விழிப்புணர்வு அந்த குடும்பத்திற்கே சென்று விடும்.அதே போல ஒரு குடும்பத்தில் பெண் கல்வி கற்றல் அந்த குடும்பமே கல்வி கற்றது போல் இருக்கும்.மேலும் இங்கு போட்டியில் கலந்து கொண்டுள்ள மாணவச் செல்வங்கள் சொல்லக் கூடிய கருத்துக்களை நன்றாக தைரியமாக கூறி உங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்யுங்கள் என்றார்.

1 முதல் 3 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டியும் ,4 முதல் 5 வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி தனியாகவும்,6 முதல் 8 ஆம் வகுப்பு வரை தனியாகவும், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தனியாகவும் பேச்சு,கட்டுரை ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.

மாவட்ட உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன்,மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேல் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இராஜா ,ஆவணப்படுத்துதல் அலுவலர் ஆ.ப.விஸ்வநாதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

போட்டியில் வட்டார அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 208 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ,வட்டார வளமைய பயிற்றுநர்கள்,ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here