இல்லங்களில் தொடர்ந்து கூடிக்கொண்டே சென்ற பணி சுமையின் காரணமாக இட்லி மற்றும் தோசை மாவுகளை வீட்டில் ஆட்டும் பிரச்சனைக்கு விடை கொடுத்து., இன்றளவில் பெரும்பாலானோர் தங்களுக்கு தேவையான இட்லி மற்றும் தோசை மாவுகளை கடைகளில் வாங்கி சமைத்து வருகின்றனர்.

இந்த இட்லி மற்றும் தோசை மாவு விற்பனையானது ஒரு புறம் அன்றாட தொழிலாகவே மாறி இதன் மூலமாக பல குடும்பங்கள் தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்களின் குடும்பத்தேவைக்காக செய்யும் தொழிலாக இருந்த நிலையில்., நிறுவனங்கள் இந்த துறையில் ஆதிக்கம் செலுத்தி தங்களின் லாபத்திற்க்காக விற்பனை செய்ய துவங்கிவிட்டனர். 

அவ்வாறு கடைகளில் விற்பனை செய்யப்படும் மாவுகள் கெட்டுப்போகாமல் இருக்க அதில் சேர்க்கப்படும் பல பொருட்களால் நமது உடலுக்கு பல்வேறு வகையான தீங்குகள் மெல்ல கொள்ளும் விஷம் போல செயலாற்றி., நமது உடல் நலத்தை நமக்கே தெரியாமல் அழித்து வருகிறது.கடைகளில் விற்பனை செய்வதற்காக சுமார் 6 நாட்கள் அதன் புளிப்பு தன்மை நீங்காமல் இருப்பதற்கு சேர்க்கப்படும் போரிக் அமிலம்., ஆரோட் மாவு போன்றவற்றை கலந்து மாவு கெடாமல் பார்த்து கொள்கின்றனர். 

மேலும்., நிறுவனங்களில் இருந்து தயாராகும் முறையில் நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் முதல் ஆறு மணி நேரம் வகை இயங்கக்கூடிய இயந்திரங்கள்., பல மணி நேரம் (12 மணி முதல் 18 மணி நேரம் வரை) இயங்குகிறது. இதன் மூலமாக இயந்திரங்களில் இருக்கும் மாவாட்டும் கற்கள் தேய்ந்து மாவுடன் கலப்பதற்கும்., அதனால் நமது சிறுநீரகத்தில் கல் உண்டாகும் பிரச்சனையும் உள்ளது. 

நமது இல்லங்களில் இட்லிக்கு மாவை ஆட்டும் சமயத்தில் வெந்தயத்தை சேர்த்து மாவை ஆட்டுவார்கள்., இயற்கையான நோய் நிவாரணியாக செயல்படும் வெந்தயத்தின் மூலமாக உடலின் வெப்பம்., வாயில் ஏற்படும் துர்நாற்றம்., குடற்புண் போன்ற பல்வேறு விதமான நோய்களை தடுக்க முடிந்தது. பெரும்பாலான நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மாவில் வெந்தயம் சேர்ப்பதில்லை

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here