போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில், ஆண்டுக்கு இருமுறை போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் பஸ் ஸ்டாண்ட்களில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இந்தாண்டுக்கான போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நாளை, 10ம் தேதி நடக்கிறது. பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, சத்துணவு மையங்கள், நகர நல மையம், நாச்சிமுத்து பிரசவ விடுதி, பஸ் ஸ்டாண்ட்கள், ரயில்வே ஸ்டேஷன் உள்பட, 27 இடங்களில், போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடக்கிறது.முகாம்களில், 9,500 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வடக்கு ஒன்றிய வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட, மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில், மொத்தம், 98 மையங்களில், 8,697 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தெற்கு ஒன்றியத்தில், மொத்தம், 77 மையங்களில், 9,591 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. கி
ணத்துக்கடவு ஒன்றியம், நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், 99 மையங்களில், ஐந்து வயதுக்கு உட்பட்ட, 8,939 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 105 மையங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. வெளியூர் பயணிகள் பயன்பெறும் வகையில், காந்திசிலை வளாகத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.ஆனைமலை ஒன்றியத்தில், 108 மையங்களில், 15,437 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
விடுபடும் குழந்தைகளுக்கு அடுத்த இரு நாட்களில் வீடு வீடாக சென்று சொட்டு மருந்து வழங்கப்படும்.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நாளை, 10ம் தேதி நடக்கிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.குழந்தைகளுக்கு ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும், இந்த முகாமில் மறுபடியும் சொட்டு மருந்து கொடுக்கலாம். காய்ச்சல், சளி என, உடல் நலம் பாதித்திருந்தால், டாக்டர் ஆலோசனை படி சொட்டு மருந்து கொடுக்கலாம். ஆனால், குழந்தைகளுக்கு மறக்காமல் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்,’ என்றனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here