லவித அரிசி வகைகள் இருந்தாலும், அவற்றில் எது இயற்கை வழியாக பிரசித்தி பெற்றுள்ளது என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். சாப்பிடும் உணவானது ஆயுர்வேத தன்மையாக இருந்தால் அதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இந்த வகை உணவுகள் நமது ஆயுளை அதிகரிப்பதோடு, நோய்கள் இல்லாமல் பார்த்து கொள்கின்றன. குறிப்பாக கேரளாவின் மிகவும் பிரபலமான பழுப்பு நிற அரசியின் மகிமைகளை சொல்லி கொண்டே போகலாம்.

இதை “எல்லா நோய்களையும் குணப்படுத்தும் தாய்” என்றே ஆயுர்வேதத்தில் குறிப்பிடுவார்களாம். இதன் பெயரும், இதன் வரலாறும் மிகவும் வியக்கத்தக்க வகையிலே உள்ளது. சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை இந்த அரிசியை சாப்பிடலாம். கேரளாவில் மிக முக்கிய மூலிகை தன்மை கொண்ட அரிசியாக இது பார்க்கப்படுகிறது.

இதை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன, இந்த அரிசியை எந்த பொருளோடு சேர்த்து சாப்பிட வேண்டும், இதை எவ்வளவு அளவு சாப்பிடுலாம், போன்ற பல தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்

ஆதி அந்தம்..!

இந்த பழுப்பு நிற அரிசியின் பெயர் “நவார அரிசி”. இது கேரளத்தை பூர்வீகமாக கொண்டது. மூலிகை தன்மையை எக்கச்சக்க அளவில் கொண்ட ஒரே அரிசி இது தான்.

இதை ஆயுர்வேதத்தில் மிக முக்கிய அரிசியாக பார்க்கப்படுகிறது. உடலில் ஏற்பட கூடிய பலவித நோய்களுக்கு இந்த அரிசி தான் மருந்தாக உள்ளதாம்.

உள் நோய்களுக்கு

உடலுக்கு வெளியில் இருக்கும் நோய்களை நம்மால் எளிதில் உணர இயலும். ஆனால், உள்ளுக்குள் இருக்க கூடிய நோய்களை அவ்வளவு எளிதில் நம்மால் உணர முடியாது.

அந்த வகையில், இந்த நவார அரிசியை சாப்பிட்டு வருவதன் மூலமாக உள்ளுக்குள் நோய்கள் உருவாவதை தடுக்கும். அத்துடன் உள் வலிகளையும் இது குணப்படுத்தும்.

ஆயுர்வேத அரிசி

இந்த அரிசியில் மூலிகை தன்மை நிறைந்து உள்ளதால் இதை சாப்பிடுவோருக்கு உடல் திடம் பெறும். நோய் நொடிகள் இல்லாமல் நீண்ட காலம் வாழ இந்த நவார அரிசியை சமையலில் பயன்படுத்தினாலே போதும். இரத்தத்தை சுத்திகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் இந்த அரிசி பயன்படுகிறது.

செரிமான மண்டலம்

நார்ச்சத்துக்கள் அதிக அளவில் இந்த அரிசியில் இருப்பதால் மிக விரைவிலே செரிமானம் அடைந்து விடும். வயிற்று உப்பசம், செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here