Educationtn.com
வரும் கல்வியாண்டு முதல் 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தையும், பாடப்புத்தகங்களையும் மாற்றியமைத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தமிழகத்தில் 2018 – 19ஆம் கல்வி ஆண்டில் 1, 6, 9 ,11 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2019 – 20ஆம் கல்வி ஆண்டில் 2, 7, 10, 12ஆம் வகுப்பிற்கு புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இப்பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணி ஏப்ரல் மாதம் இறுதியில் முடிவடையும் நிலையில் உள்ளது.
மேலும் 2020 -21ஆம் கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய 3, 4, 5, 8ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவத்திற்குரிய பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு புத்தக வடிவமைப்பு பணியில் உள்ளது. இவை ஏப்ரல் மாத இறுதிக்குள் வழங்க இயலும். முதல் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் தயாரித்து வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் இரண்டாம் பருவம் பாடங்களுக்கான புத்தகங்கள் வழங்கப்படும்.
எனவே 2019-20ஆம் கல்வி ஆண்டிலேயே 3, 4, 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டம் மாற்றம் செய்து புதிய பாடப் புத்தகங்கள் வழங்குவதற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனருக்கு அனுமதி வழங்கப்படுகிறது’, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வரும் கல்வி ஆண்டில் 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here