• மேஷம்
  மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பெற்றோர் உங்களின் புது முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடன் பிரச்னை தீரும். புதுத் தொழில்  தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோ கத்தில் உங்கள் கை ஓங்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
 • ரிஷபம்
  ரிஷபம்: உணர்ச்சிப் பூர்வ மாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப்  பேசுவீர்கள், செயல்படு வீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. மற்றவர் களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக் கையைப் பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
 • மிதுனம்
  மிதுனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உற்சாகமான நாள்.
 • கடகம்
  கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள். 
 • சிம்மம்
  சிம்மம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். உடன்பிறந் தவர்களால் பயனடைவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். 
  புது நட்பு மலரும். வியாபாரத்தில் எதிர்பா ராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். 
 • கன்னி
  கன்னி: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். சொந்தம்-பந்தங்கள்மதிக்கும் அளவிற்கு நடந்து கொள்வீர்கள். அரசால்அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோ கத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.
 • துலாம்
  துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்.உறவினர்களின் அன்புத் தொல்லை  குறையும். உங்களைச் சுற்றியிருப் பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள் வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள். 
 • விருச்சிகம்
  விருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர் கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்துப்போகும். புது வேலை அமையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபா ரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்
 • தனுசு
  தனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடை வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
 • மகரம்
  மகரம்: கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பார்த்த இடத் திலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர் கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
 • கும்பம்
  கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றா கவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.
 • மீனம்
  மீனம்: திட்டமிட்டவை தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங் கல் வரும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோ கத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here