புதுக்கோட்டையில் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பள்ளிமேலாண்மை வளர்ச்சிக்குழு சார்ந்த கருத்தாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

புதுக்கோட்டை,மார்ச்.6: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மேலாண்மைப் பயிற்சி அளிப்பதற்கான மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட கூட்ட அரங்கில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா அவர்களின் ஆலோசனைப்படி நடைபெற்றது.

பயிற்சியின் நோக்கம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன்,பள்ளி துணை ஆய்வாளர் ஜெயராமன்,புள்ளியல் அலுவலர் பத்மநாபன் ஆகியோர் பேசினார்கள்.

குழந்தைகளுக்கான இலவச கட்டாயகல்வி உரிமைச்சட்டம்,சமூக தணிக்கை மற்றும் வினா நிரல் குறித்து முதுநிலை விரிவுரையாளர் ஆனந்தராசு கலந்துரையாடினார்.

பள்ளி மேலாண்மைக்குழு,பள்ளி நிதியை பயன்படுத்துதல் ,பார்வையிடல் மற்றும் வழிகாட்டுதல்,தூய்மைப் பள்ளி,நடத்தை மாற்றம் மற்றும் திறன் மேம்பாடு குறித்து போரம் பள்ளியின் தலைமையாசிரியர் க.சு.செல்வராசு பயிற்சி அளித்தார்.

பாலினப் பாகுபாடு களைதல் ,குழந்தைகளின் உரிமைகள்,பள்ளி முழுமைத் தரநிலை மற்றும் மதிப்பீடு,தரமான கல்வி கற்றல் விளைவுகள் குறித்து வட்டார வளமைய பயிற்றுநர் பரிசுத்தம் பயிற்சியளித்தார்.

பேரிடர் மேலாண்மை குறித்து புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை நிலைய அதிகாரிகள் பெரியதம்பி,செல்வராஜ் மற்றும் முன்னணி தீயணைப்பாளர்கள் மங்களேஸ்வரன்,முனிசாமி பேசினார்கள்.

கல்வி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் குறித்து மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் கு.முனியசாமி பேசினார்.

மார்ச் 5 ஆம் தேதி செவ்வாயன்று நடைபெற்ற பயிற்சியில் குன்றாண்டார் கோவில்,அறந்தாங்கி,அரிமளம்,கந்தர்வக்கோட்டை,புதுக்கோட்டை,திருவரங்குளம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த கருத்தாளர்களாக செயல்பட உள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.

மார்ச் 6 ஆம் தேதி புதன்கிழமை இரண்டாம் நாள் நடைபெற்ற பயிற்சியில் கறம்பக்குடி,திருமயம்,பொன்னமராவதி, விராலிமலை ,அன்னவாசல் ,ஆவுடையார் கோவில் ,மணல்மேல்குடி ஆகிய ஒன்றியங்களில் கருத்தாளர்களாக செயல்பட உள்ள ஆசிரிய பயிற்றுநர்கள் ,ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள் .

அடுத்த பயிற்சியானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளிமேலாண்மைக் குழு மற்றும் பள்ளிமேலாண்மை வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கு அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள குறுவளமையங்களில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெறும்.அனைத்து வகையான அரசுப்பள்ளிகளிலும் மார்ச் 29 அன்று பள்ளி மேலாண்மை மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் சமூக தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் செய்திருந்தார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here