தேநீரில் பல வகை காணப்பட்டாலும் அனைவராலும் விரும்பப்படுவது க்ரீன் டீ. மனித உடலுக்கு புத்துணர்ச்சி தருவது மட்டுமில்லாமல், மனித உயிர்களை காக்கும் மருந்தாகவும் உள்ளன. க்ரீன் டீ, கேமிலியாசைனன்ஸிஸ் எனப்படும் தாவரத்தின் இலைகளில் இருந்து பெறப்படுகிறது. 

க்ரீன் டீயில் அதிகமாக காணப்படும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் வயது முதிர்வை தாமதப்படுத்தி இளமையையும் ஆரோக்கியத்தையும் நீடிக்க செய்கிறது. உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையை சமச்சீராக பராமரிக்கிறது. க்ரீன் டீயில் உள்ள எபிகேலோ கேட்சின் மூளையின் செயல்திறனை அதிகரித்து நினைவாற்றலை பெருக்குகிறது.  

மேலும், இதில் உள்ள பாலிபீனால்கள் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் அழிக்கிறது. தீங்கிழைக்கும் என்சைம்களின் வளர்ச்சியை தடுத்து ரத்தப்புற்று, நுரையீரல் புற்று, தொண்டை புற்று, வயிறு, குடல், ஈரல் புற்று மற்றும் மார்பக புற்று போன்றவற்றின் தீவிரத்தை குறைக்கிறது. 

முகப்பரு, வறண்ட சருமம், சரும அலர்ஜி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் தருகிறது. ரத்த அழுத்தம், பக்கவாதம், அல்சைமர் போன்றவற்றை தவிர்க்கிறது. எலும்புகள் பலமடையவும் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் செய்கிறது. 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here