சென்னை, ‘நாளை முதல் இரண்டு நாட்களுக்கு, 11 மாவட்டங்களில், அனல் காற்று வீசும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.தமிழகத்தில், கோடை வெயில் காலம் துவங்கியுள்ளது. பகல் நேர வெயிலின் அளவு, நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இரவு நேர வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. வெப்பம்வெயிலின் தாக்கம், மாவட்டம் தோறும், ஒவ்வொரு நாளும் மாறுபடுகிறது. சில நாட்கள் பகலில் அதிக வெப்பமும், சில நாட்கள் இரவில் அதிக வெப்பமும் என, வானிலை மாறுகிறது.இந்நிலையில், ‘வேலுார், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய, 11 மாவட்டங்களில், நாளையும், நாளை மறுநாளும், அனல் காற்று வீசும். ‘எனவே, பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மேலும், ‘வழக்கத்தை விட, இந்த மாவட்டங்களில், 3 டிகிரி செல்ஷியஸ் வரையும், கடலோர மாவட்டங்களில், 2 டிகிரி செல்ஷியஸ் வரையும், வெயில் கூடுதலாக தாக்கும்’ என்றும் கூறியுள்ளது.நேற்றைய நிலவரம்நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில், 38 டிகிரி செல்ஷியஸ்; குறைந்த பட்சமாக, கொடைக்கானலில், 20 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.சென்னை விமான நிலைய பகுதிகளில், 34, நுங்கம்பாக்கம் பகுதியில், 32 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. இன்றைய வானிலையை பொறுத்தவரை, ஈரப்பதம் இல்லாத காற்றுடன் கூடிய, வறண்ட வானிலை நிலவும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here