மத்திய அரசின் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 151 காலி பணியிடங்கள்!

மத்திய அரசின் தொழிலாளர் நல அமைப்பு தொழிலாளர் அரசு காப்பீட்டு (இ.எஸ்.ஐ.சி.) நிறுவனத்தில் 151 ஸ்டெனோகிராபர் மற்றும் எழுத்தர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அந்த பணி இடங்களில் வேலைக்குச் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை https://www.esic.nic.in என்ற இ.எஸ்.ஐ.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். 

நியமிக்கப்படுபவர்களுக்கு ரூ.5,200 முதல் ரூ.25,500 வரை சம்பளம் கிடைக்கும். தேர்வாகும் சிலருக்கு போக்குவரத்துச் செலவு, அகவிலைப் படி, வீட்டு வாடகைப் படி ஆகியவையும் கிடைக்கும்.
ஸ்டெனோ பணிக்கான குறைந்தபட்ச தகுதிகள்
1. உயர்நிலைப் பள்ளி படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் (12ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான வேறு படிப்பில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தேர்ச்சி)
2. ஒரு நிமிடத்தல் 80 வார்த்தைகள் டைப் செய்யும் திறன்
3. கம்ப்யூட்டரைக் கையாளும் திறன் (Office Suites and databases)
எழுத்தர் பணிக்கான குறைந்தபட்ச தகுதிகள்
1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூரத்தி செய்திருத்தல்
2. கம்ப்யூட்டரைக் கையாளும் திறன் (Office Suites and databases)
விண்ணப்பக் கட்டணம்
பொதுப்பிரிவு மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.500
எஸ்.சி./எஸ்.டி./பெண்கள் போன்றோருக்கு ரூ. 250
கட்டணம் செலுத்தும் வழிகள்
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் மற்றும் இ-செலான் (E-Challan)
வயது வரம்பு
15. 04. 2019ல் 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விதிகளுக்கு உட்பட்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. விவரிவான விவரங்களுக்கு.
ESIC Steno & UDC Recruitment 2019: Read official notice here
விண்ணப்பிக்கும் முறை
இ.எஸ்.ஐ.சி. இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். பின், விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here