பாடத்திட்டத்தில் உள்ள இரண்டு நாவல்களில் ஏதேனும் ஒரு நாவல் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தால் போதும் என்ற வாய்ப்பு இருந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு நாவல்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்து பதில் எழுதுவதற்கான சாய்ஸ் அளிக்கப்படவில்லை.
Cbsce 12ஆம் வகுப்புக்கான ஆங்கிலப் பாட பொதுத்தேர்வில் இரண்டு கேள்விகளில் குளறுபடி ஏற்பட்டிருப்பதாக மாணவ மாணவியர் தெரிவிக்கின்றனர்
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி ஆரம்பமானது. ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன. எல்லா தேர்வுகளும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடியும்
இத்தேர்வில் 21,400 பள்ளிகளைச் சேர்ந்த 12,87,359 மாணவ மாணவிகள் பங்கேற்க உள்ளனர். 4,974 தேர்வு மையங்களில் இத்தேர்வுகள் நடக்கின்றன. தேர்வு மேற்பார்வை மற்றும் கண்காணிப்புப் பணிகளில் சுமார் 3 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். 
இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஆங்கிலத் தேர்வில் (ENGLISH CORE) இரண்டு வினாக்கள் சாய்ஸ் இல்லாமல் கேட்கப்பட்டிருப்பதாக மாணவ மாணவியர் புகார் கூறுகின்றனர். 
பாடத்திட்டத்தில் உள்ள இரண்டு நாவல்களில் ஏதேனும் ஒரு நாவல் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தால் போதும் என்ற வாய்ப்பு இருந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு நாவல்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்து பதில் எழுதுவதற்கான சாய்ஸ் அளிக்கப்படவில்லை. 

H G Wells எழுதிய ‘The Invisible Man‘ என்ற நாவலும் George Eliot எழுதிய ‘Silas Marner‘ என்ற நாவலும் சிபிஎஸ்இ ஆங்கிலப் பாடத்தில் (ENGLISH CORE) உள்ளன. 

வினாத்தாள் எளிமையாகவே இருந்தாலும் இந்த இரண்டு நாவல்கள் பற்றிய கேள்விகள் மட்டும் கடினமாக அமைந்துவிட்டதாக பெரும்பாலானவர்கள் தெரிவிக்கிறார்கள். பல மாணவ மாணவிகள் ஒரு நாவலை மட்டுமே படித்து வந்ததால் கதாபாத்திரங்கள் மற்றும் கதைப்போக்கு பற்றி எதுவுமே தெரியாமல் விடையளிக்க முயன்றதாகக் குறிப்பிட்டனர். 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here