அபிநந்தனுக்கு செவ்வாய் கிரகத்திலிருந்து வாழ்த்து!


அபிநந்தனுக்கு செவ்வாய் கிரகத்திலிருந்து வாழ்த்து!
பாகிஸ்தானிலிருந்து விடுவிக்கப்பட்ட அபிநந்தனுக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் செவ்வாய் கிரகத்தில் இருந்து மங்கல்யான் விண்கலம் வாழ்த்துச் செய்தி அனுப்பி கவுரவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ மங்கல்யான் எனும் மார்ஸ் ஆர்பிட்டர் விண்கலத்தை 2013ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் திட்டமிட்டபடி 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரகத்துக்குச் சென்றடைந்து சாதனை படைத்தது. செவ்வாய்க்கான விண்கலங்களில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறும் பெருமையைப் பெற்ற மங்கல்யான், செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பிய முதல் ஆசிய நாடு என்ற பெருமையையும் இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தது.

ஆசிய நாடுகள் மத்தியில் இந்தியாவைத் தலைநிமிரச் செய்த மங்கல்யான் தற்போது அபிநந்தனைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. மங்கல்யான் விண்கலம் அபிநந்தனுக்குத் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ‘உங்களை எண்ணி நாங்கள் பெருமை கொள்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மங்கல்யான் விண்கலத்தைச் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பிய நிலையில் அதற்காக இஸ்ரோ, மார்ஸ் ஆர்பிட்டர் என்ற ட்விட்டர் பக்கத்தை உருவாக்கியது. இந்த நிலையில் அந்த ட்விட்டர் பக்கத்தில் அபிநந்தனை கவுரவிக்கும் விதமாக இஸ்ரோ இவ்வாறு பதிவு செய்துள்ளது.

2018 செப்டம்பர் 29ஆம் தேதி இந்த மார்ஸ் ஆர்பிட்டர் ட்விட்டர் பக்கத்தில், செவ்வாய் கிரகத்துக்குச் சென்றடைந்த நான்காவது ஆண்டு நிறைவு தினத்தைக் கொண்டாடும் விதமாக ட்வீட் செய்திருந்தது. அதைத்தொடர்ந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு தற்போது அபிநந்தனுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here