*வேண்டுகோள்*
=====!=========
*பெறுநர்*

*மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள்*
*தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திராவிட முன்னேற்ற கழக தலைவர்*
================
*மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின்* அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் வருகின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தாங்கள் அங்கம் வகிக்கும் தேசிய அளவிலான கூட்டணி தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு பணிகளில் அந்தந்த மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்ய தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்ய வலியுறுத்த வேண்டும்

ஏனென்றால் பெரும்பாலானவர்கள் வட மாநிலத்தை சேர்ந்த இந்தி மொழி தெரிந்தவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படுகிறது தென் மாநிலங்களில் பெரும்பாலானோர் மத்திய அரசு பணியில் இந்தி மட்டுமே பேசத் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள் அவர்களுக்கு ஆங்கிலம் கூட தெரியவில்லை இந்த அவலத்தில் பணியாற்றுகிறார்கள்

அந்தந்த மாநிலத்தில் இருப்பவர்கள் மத்திய அரசு பணிகளில் சேர்வது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது
மத்திய அரசு பணிகளில் அந்தந்த மாநிலங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அந்தந்த மாநில மொழிகளில் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுத அனுமதித்து அந்த பணியிடத்தில் அந்த மாநிலத்தவரை பணியில் சேர முன்னுரிமை அளிக்க வேண்டும்

அதேபோன்று 2004ம் அப்போதைய பாரதிய ஜனதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் அமர்த்தப்பட்ட மத்திய மாநில அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் திட்டத்தையும் தேர்தல் அறிக்கையில் கொண்டுவர தாங்கள் வலியுறுத்த வேண்டும்

*முத்தமிழ் அறிஞர் கலைஞர்* அவர்கள் அரசு ஊழியர்களின் காவலராகவும் எங்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இதய தெய்வமாய் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

அதே நிலையில்தான் தங்களையும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நினைக்கின்றார்கள்

தங்கள் ஒருவரால் மட்டும் தான் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியும் இதில் எந்த ஐயமும் இல்லை

*மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின்* அவர்கள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை தங்கள் வகிக்கும் மத்திய அளவிலான தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறேன்

*சா அருணன்*
*நிறுவனத் தலைவர்* *தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு*
==================

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here