வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுக்க சுமார் 130 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். செயலியின் ஒட்டுமொத்த பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன.
வாட்ஸ்அப் க்ரூப் இன்விடேஷன், டார்க் மோட், சாட்களுக்கு கைரேகை சென்சார் லாக், தொடர்ச்சியாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை சரிபார்க்க புதிய வசதி உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன. இவை தவிர, வாட்ஸ்அப் விரைவில் அட்வான்ஸ்டு சர்ச் மோட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. .
புதிய ஆப்ஷனிற்கென வாட்ஸ்அப் செயலியில் மீடியா எனும் புதிய வசதி சேர்க்கப்படும் என்றும் இதனை கொண்டு பயனர்கள் புகைப்படங்கள், ஜிஃப்கள், வீடியோக்கள், டாக்குமென்ட், லிண்க் மற்றும் ஆடியோ உள்ளிட்டவற்றை தேட முடியும்.உதாரணத்திறஅகு வாட்ஸ்அப் மீடியா ஆப்ஷனில் புகைப்படங்களை தேர்வு செய்யும் போது, புகைப்படங்கள் மட்டும் வரிசைப்படுத்தப்படும்.
இதுதவிர மீடியா அபனஷன் வாட்ஸ்அப் ஸ்டோரேஜில் எத்தனை மீடியா ஃபைல்கள் சேமிக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களும் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. .
வாட்ஸ்அப் சர்ச் ஆப்ஷனில் தேடும் போது பிரீவியூ வழங்கப்படும் என்பதால், பயனர் தேடும் தரவுகளை மிகச்சரியாக தேர்வு செய்து பெற முடியும். புதிய அட்வான்ஸ் சர்ச் ஆப்ஷன் தொடர்ந்து உருவாக்கும் பணிகளில் இருப்பதாகவும், விரைவில் இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here