முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகள் பட்ட மேற்படிப்புகளாக மாற்றம்: இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல்

*☀☀தமிழகத்தில் 14 பிரிவுகளில் முதுநிலை மருத்துவப்
பட்டயப் படிப்புகளுக்கான 384 இடங்களை பட்ட மேற்படிப்புகளாக மாற்றுவதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.*

*☀☀அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு விரைவில் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.*

*☀☀இதையடுத்து, எதிர்வரும் கல்வியாண்டில் (2019-20) மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 1,758-ஆக அதிகரிக்க உள்ளது.*

*☀☀இதன் மூலம், நாட்டிலேயே அதிக மருத்துவ மேற்படிப்பு இடங்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.*

*☀☀தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தற்போதைய நிலவரப்படி 1,250 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன.*

*☀☀அதில், அதிகபட்சமாக சென்னை மருத்துவக் கல்லூரியில் 213 இடங்கள் உள்ளன.*

*☀☀ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 152 இடங்களும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 134 இடங்களும் இருக்கின்றன.*

*☀☀இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற முதுநிலை மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வில் தமிழக மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.*

*☀☀இதனால், எதிர்வரும் கல்வியாண்டில், மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.*

*☀☀இந்தச் சூழலில், தமிழகத்தில் முதுநிலை படிப்புகளுக்குக் கூடுதலாக 157 இடங்களை ஒதுக்குமாறு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் வலியுறுத்தியது.*

*☀☀அதன் அடிப்படையில் தற்போது 124 இடங்களை அதிகரிக்க மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.*

*☀☀இதற்கு நடுவே, பல ஆண்டு காலமாக இருந்து வரும் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு இடங்களை, பட்ட மேற்படிப்புகளாக மாற்றுவதற்கு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் அண்மையில் விண்ணப்பித்திருந்தது.*

*☀☀அதனைப் பரிசீலித்த இந்திய மருத்துவக் கவுன்சில் வாரிய உறுப்பினர்கள், 14 பிரிவுகளில் உள்ள 384 முதுநிலை பட்டயப் படிப்பு இடங்களை பட்ட மேற்படிப்புகளாக மாற்ற அனுமதி அளித்துள்ளனர்.*

*🌀🌀🌀இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ கூறியதாவது:*

*♦♦சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி ஆகிய 6 கல்லூரிகளில் மட்டுமே முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகள் உள்ளன.*

*♦♦இக்கல்லூரிகளில் செயல்படும் 14 பிரிவுகளில் உள்ள384 முதுநிலை பட்டயப் படிப்பு இடங்களும் வரும் கல்வியாண்டில் பட்ட மேற்படிப்புகளாக மாற்றப்பட உள்ளன.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here