புதுடில்லி : இந்திய விமானப்படையின் விங் கமான்டர் அபிநந்தனின் ‘தமிழக’ மீசை ஸ்டைல், இந்தியா முழுவதும் பிரபலமடைந்துள்ளது.

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாக்., விமானங்களை விரட்டிச் சென்ற, இந்திய விமானப்படையின், ‘மிக் – 21’ ரக விமானம், பாக்.,எல்லைக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்த, தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய விமானப் படையின் விங் காமாண்டருமான, விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு, இன்று(மார்ச் 1) விடுதலை செய்யப்பட்டார்.

பாக்., ராணுவத்தினர் சிறை பிடித்த போது, முகத்தில் ரத்தம் வழிந்த போதும், அவரது உறுதியும், துணிச்சலும் சற்றும் குறையவில்லை. நெஞ்சை நிமிர்த்தி இந்தியர்கள் அனைவரையும் பெருமை கொள்ள வைத்தார்.இந்நிலையில் அவரது தமிழக அருவா ‘மீசை’ ஸ்டைல், இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது. இதுகுறித்து பலரும் அவரது மீசையையும், உதட்டில் உதிரும் சிரிப்பையும் புகழ்ந்து டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here