தமிழக அரசு சார்பில், 201 பேருக்கு, ‘கலைமாமணி விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின், பொதுக்குழு பரிந்துரைத்தபடி, இயல், இசை, நாட்டியம், நாடகம், கிராமியம், திரைத்துறை, சின்னத்திரை போன்ற கலை பிரிவுகளில் புகழ் பெற்ற, திறமைமிக்க, 201 கலைஞர்களுக்கு, ‘கலைமாமணி’ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.திரைப்பட நடிகர்கள் விஜய்சேதுபதி, சசிகுமார், பிரபுதேவா, பிரசன்னா, பாண்டியராஜன், கார்த்தி, சரவணன், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமய்யா, சூரி, சிங்கமுத்து, ஸ்ரீகாந்த், சந்தானம், நடிகையர் பிரியாமணி, நளினி, சாரதா, நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருது பெறும், ஒவ்வொரு கலைஞருக்கும், மூன்று சவரன் தங்கப் பதக்கம், சான்றிதழ்வழங்கப்படும்.புலவர் புலமைப்பித்தன், கவிஞர் சுப்பு ஆறுமுகம், எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோருக்கு, ‘பாரதி விருதுகள்’ அறிவிக்கப்பட்டுள்ளன.இசைப் பிரிவில், எஸ்.ஜானகி, பாம்பே சகோதரிகள் சரோஜா – லலிதா, கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு, ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதுகள்’ வழங்கப்பட உள்ளன.நாட்டிய பிரிவில், வைஜயந்தி மாலா பாலி, தனஞ்செயன், சந்திரசேகர் ஆகியோருக்கு, ‘பால சரஸ்வதி விருதுகள்’ அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையுடன், சான்றிதழ்வழங்கப்படும்.விரைவில் நடக்க உள்ள அரசு விழாவில், முதல்வர் பழனிசாமி விருதுகள் வழங்கிகவுரவிப்பார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here