TNTA WISHES. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ,மாணவிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றத்தைத் தவிர்த்திட தேர்வு அறைக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிடவேண்டும். கண்டிப்பாக செல்லிடப்பேசி எடுத்துசெல்லக்கூடாது. நுழைவு சீட்டு உள்ளிட்ட. பேனா,பென்சில் கையோடு எடுத்துச்செல்லுங்கள் . விடைத்தாள் வழங்கப்பட்டப்பிறகு உங்களுக்கு வழங்கப்பட்ட தேர்வு எண்ணும் புகைப்படமும் சரிபார்த்துக்கொண்டு,தவறானது என்றால் உடனடியாக அறைகண்காணிப்பாளரிடம் தெரிவித்து உரியதைப் பெற்றுக்கொள்ளவும்.நம்பிக்கையோடு எழுதுங்கள் அடித்தல்- திருத்தலின்றி எழுதுங்கள் , வெற்றி நிச்சயம். பெற்றோர்கள் தன் குழந்தைகளிடம் வருத்தம் அளிக்கும் வார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது ஆறுதலான சொற்களே குழந்தைகளிடம் அற்புதத்தை அறியமுடியும்.திணிக்கும் வார்த்தைகளைவிட தித்திக்கும் வார்த்தைகளே திருப்தியளிக்கும். வாழ்த்துப்பூக்களோடு. .
பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here