புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வினை 21,096 மாணவ,மாணவிகள் எழுதுகிறார்கள்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல்.

புதுக்கோட்டை,பிப்.28: புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் டூ அரசு பொதுத் தேர்வினை அரசுப்பள்ளி,நகராட்சிபள்ளி,ஆதிதிராவிடர் நலப்பள்ளி, தனியார் பள்ளி,மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவிகள் தனித்தேர்வர்கள் என மொத்தம் 21,096 பேர் தேர்வு எழுதுகிறார்கள் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 27 தேர்வு மையங்களும்,புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 33 தேர்வு மையங்களும்,இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 21 தேர்வு மையம் என 81 மையங்களில் மாணவர்கள் தேர்வினை எழுதுகிறார்கள்.

அறந்தாங்கியில் 4, புதுக்கோட்டையில் 5, இலுப்பூரில் 3 என 12 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் உள்ளன.

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 3370 ஆண்கள்,3631 பெண்கள் என 7001 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.புதுக்கோட்டை கல்விமாவட்டத்தில் 3508 ஆண்கள்,4506 பெண்கள் என மொத்தம் 8014 பேர் தேர்வு எழுதுகிறார்கள்..இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 2640 ஆண்கள்,3158 பெண்கள் என 5798 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 9518 ஆண்கள் ,11295 பெண்கள் என 20,813 பேர் தேர்வெழுதுகிறார்கள். இது தவிர தனித்தேர்வர்கள் 283 பேர் என மொத்தம் 21096 பேர் பிளஸ் டூ தேர்வெழுதுகிறார்கள்..

தேர்வானது மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 19 ஆம் தேதி முடிவடைகிறது.

தேர்வானது பழைய பாடத்தில்( தனித்தேர்வர்களுக்கு) தேர்வெழுதுபவர்களுக்கு 10 மணி முதல்1.15 வரை நடைபெறும்.புதிய பாட திட்டத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கு 10 மணி முதல் 12.45மணி வரை நடைபெறும்..

இதில் தமிழ்,ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடமும் புதிய பாடத்திட்டம் மற்றும் பழைய திட்டத்தில் எழுதுபவர்களுக்கு காலை 10 மணி முதல் 12.45மணி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. பழைய நடைமுறையில் ஒரு பாடத்திற்கு 200 மதிப்பெண்ணும்,புதிய நடைமுறையில் ஒரு பாடத்திற்கு 100 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.

தேர்வு மையத்தில் 10மணி முதல் 10.10 வினாத்தாள் படிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது,10.10 முதல் 10.15 வரை தேர்வு எழுதுபவர்களின் பெயர்கள் சரிபார்க்க நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது.

தேர்வு கண்காணிப்பு பணியில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள்,துறை அலுவலர்கள்,பறக்கும் படையினர்,வழித்தட அலுவலர்கள்,கட்டுக்காப்பாளர்கள்,அறைக்கண்காணிப்பாளர்கள்,தொடர்பு அலுவலர்கள் என பலர் செயல்படுவார்கள்..

மையங்களில் புகார்கள் ஏதுமின்றி தேர்வு செம்மையாக நடைபெறுதலை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களில் கூடுதல் துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து தேர்வு மையத்திற்கு தனி வாகனங்களில் வழித்தட அலுவலர்கள் மூலம் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும்.பின் அவர்கள் விடைத்தாள்களை சேகரித்து சேகரிப்பு மையத்தில் ஒப்படைப்பர் என தெரிவித்துள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here