மத்திய அரசின் கீழ் காலியாக உள்ள வனத் துறை பணியிடங்களை நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசில் வனத்துறை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - யுபிஎஸ்சி!

நிர்வாகம் : வனத்துறை பணியாளர்

மேலாண்மை : மத்திய அரசு

தேர்வின் பெயர் : இந்திய வனத்துறை பணித் தேர்வு – 2019

மொத்த காலிப் பணியிடம் : 90

கல்வித் தகுதி : கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், வேதியியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் அல்லது விவசாயம், வனவியல் போன்ற ஏதேனும் ஓர்த் துறையினை முதன்மைப் பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 01.08.2019 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதாவது முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

முதல்நிலைத் தேர்வு மையம் :சென்னை, மதுரை, கோவை, வேலூர்

முதன்மைத் தேர்வு சென்னையில் வைத்து நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை :www.upsconline.nic.in என்னும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 18.03.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://upsc.gov.in/sites/default/files/Final_Notice_IFoS_2019-NN.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here