அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்மாணவர் மற்றும்ஆசிரியர்கள் வருகைபதிவுக்கு பயோ மெட்ரிக்முறையை அறிமுகப்படுத்ததடை கோரிய வழக்கைசென்னை உயர்நீதிமன்றம்தள்ளுபடி செய்துள்ளது.

 

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில்ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவுமுறை அமல்படுத்தப்படும்என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்கே.ஏ.செங்கோட்டையன்கடந்த ஆண்டு மே மாதம்நடைபெற்ற மானியக்கோரிக்கைவிவாதத்தின்போதுஅறிவித்தார். இதையடுத்துகடந்த நவம்பர் மாதத்தில்இதற்கான அரசாணைவெளியிடப்பட்டது.

அதில், தமிழகத்தில் 3,688உயர்நிலைப் பள்ளிகள், 4,040 மேல்நிலைப்பள்ளிகள் என 7,728பள்ளிகளில் ரூ.15.30 கோடிசெலவில் பயோ மெட்ரிக்திட்டம் அமல்படுத்தப்படும்என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது.இதைத் தொடர்ந்துசென்னையிலும்,பெரம்பலூரிலும் தலா ஒருபள்ளிகளில் இந்தத் திட்டம்சோதனை அடிப்படையில்நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவைமாவட்டத்தில் இரண்டுபள்ளிகளில் இந்தத் திட்டம்அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் அரசு மற்றும்அரசு உதவி பெறும்பள்ளிகளில் மாணவர்மற்றும் ஆசிரியர்கள்வருகை பதிவுக்கு பயோமெட்ரிக் முறையைஅறிமுகப்படுத்த தடைகோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில்தனியார் கல்விஅறக்கட்டளை சார்பில்வழக்கு தொடரப்பட்டுள்ளது.இவ்வழக்கு சென்னைஉயர்நீதிமன்றத்தில் இன்றுவிசாரணைக்கு வந்தது.

அப்போது நல்லதிட்டத்துக்கு தடை விதிக்கமுடியாது என கூறியநீதிமன்றம் வழக்கைதள்ளுபடி செய்துஉத்தரவிட்டது. மேலும்வழக்கு தொடர்ந்தவருக்குரூ.10 ஆயிரம் அபராதம்விதித்தும் சென்னைஉயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here