தமிழ்நாடு காகித ஆலையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Office (Lab)
சம்பளம்: மாதம் ரூ.19,200 – 24,000
வயதுவரம்பு: 01.02.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (Lab)
சம்பளம்: மாதம் ரூ.23,400 – 29,300
வயதுவரம்பு 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Deputy Manager(Lab)
சம்பளம்: மாதம் ரூ.28,200 – 35,300
வயதுவரம்பு: 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வேதியியல் துறையில் எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் Pulp and paper Technology பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது paper Technology பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: அதிகாரி பணிக்கு 8 ஆண்டுகளும், உதவி மேலாளர் பணிக்கு 10 ஆண்டுகளும் மற்றும் துணை மேலாளர் பணிக்கு 14 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Chief General Manager-HR, TNPL, Kagithapuram-639 136, Karur District, Tamilnadu.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.03.2019

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here