மத்திய அரசு மற்றும்பொதுத்துறைநிறுவனங்களில்,பிற்படுத்தப்பட்டோருக்கு 27விழுக்காடு இடஒதுக்கீடு, சமூக நீதிக்காவலர், நமது முன்னாள்பாரதப்பி்ரதமர்காலஞ்சென்ற வி.பி. சிங்அவர்களின் முயற்சியால், 1993 முதல் மத்திய அரசுவேலை வாய்ப்பிலும், 2007முதல், மத்திய அரசின்கல்வி நிலையங்களான IIT, IIM போன்ற உயர் கல்விநிறுவனங்களில்நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த வேலைவாய்ப்பிற்குவிண்ணப்பிப்பதற்கும்,கல்வி நிறுவனங்களில்சேர்வதற்கும்,பிற்படுத்தப்பட்ட சமுதாயமாணவர்கள், அதற்கானஜாதி சான்றிதழ்அனுப்பவேண்டும்.

அதற்குப் பெயர் தான் ஓபிசிசான்றிதழ்.

தமிழ்நாட்டில் தற்போதுஇருக்கும்பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.),மிகவும் பிற்படுத்தப்பட்டோர்(எம்.பி.சி) என ஜாதிசான்றிதழ் தரப்படுகிறது.இவர்களுக்கு, மத்தியஅரசில் பணியில் அல்லதுகல்வி நிலையத்தில்சேர்வதற்கு, ஓபிசிசான்றிதழ் அதாவது இதரபிற்படுத்தப்பட்டோர்சான்றிதழ் எனகூறப்படுகிறது.

இந்த ஓபிசி சான்றிதழ்,பி.சி., எம்.பி.சி. சான்றிதழ்வழங்கும், அதேவட்டாட்சியரால் தான்(தாசில்தார்) தரப்படுகிறது.

ஓபிசி, சான்றிதழ்பெறுவதற்கு பெற்றோர்ஆண்டு வருமானம் முக்கியபங்கு வகிக்கிறது.

இந்த ஓபிசி சான்றிதழ்யாருக்குக் கிடையாது?

1) தமிழ் நாட்டில், பி.சி.,எம்.பி.சி. பட்டியலில் உள்ளஜாதிகளில், சில ஜாதிகள்,மத்திய அரசின் ஓ.பி.சி.பட்டியலில் இன்னும்சேர்க்கப்படாமல்இருக்கின்றன. அந்தஜாதிகளுக்கு, ஓபிசிசான்றிதழ் கிடைக்காது.

இந்த ஜாதிப்பிரிவைச்சேர்ந்தவர்கள், மத்தியஅரசின் வேலை வாய்ப்பில்அல்லது கல்விநிலையத்தில் சேர்வதற்கு,பொதுப்பிரிவில்தான்அதாவது திறந்தபோட்டியில்தான்விண்ணப்பிக்க முடியும்.இதனை, www.ncbc.nic.inஎன்ற இணைய தளத்தில்பார்த்து விபரம்அறிந்துகொள்ளலாம்.

2) IAS, IPS போன்ற குரூப் ஏபதவியில் பெற்றோர்கள்இருந்தால், அவர்களதுபிள்ளைகளுக்கு, இந்தஓபிசி சான்றிதழ்கிடையாது.

3) GROUP – C அல்லது GROUP – B யில் பணியில் சேர்ந்து, 40வயதுக்குள், GROUP – Aபதவிக்குச் சென்றாலும்,அந்த தகப்பனாரின்குழந்தைகளுக்கு, ஓபிசிசான்றிதழ் கிடையாது. அதேநேரத்தில் அந்தக்குழந்தையின் தாய் , GROUP – A பணியில் 40 வயதுக்குள்பதவி உயர்வு பெற்றால்,சான்றிதழ் பெறதடையில்லை

4) பெற்றோர்களதுவருமானம் மூன்றுஆண்டுகளுக்கும்சராசரியாக ஒருஆண்டுக்கு ரூபாய் ஆறுலட்சத்தைத் தாண்டிஇருந்தால், அவர்களதுபிள்ளைகளுக்கு, ஒபிசிசான்றிதழ் பெற முடியாது.

இதில், வியாபாரிகள்,வழக்குரைஞர்கள்,மருத்துவர்கள், பொறியாளர்கள் என தனியேநிறுவனம் அமைத்து,வருமானம் இருந்தால்,அந்த வருமானம்,ஆண்டுக்கு, ரூபாய் ஆறுலட் சத்தைத் தாண்டினால்,அவர்களுக்கு, ஓபிசிசான்றிதழ் கிடைக்காது

அப்படி என்றால்,யாருக்குத்தான் ஓபிசிசான்றிதழ் கிடைக்கும்?

a). GROUP – A GROUP – Bபோன்ற பதவி தவிர்த்து, , GROUP – C, GROUP – D போன்றபதவிகளில் பணிபுரிந்தால்,அப்போது, அவர்களதுசம்பளம், ஆண்டுக்கு,ரூபாய் ஆறு லட்சத்தைத்தாண்டினாலும், ஒபிசிசான்றிதழ் கிடைக்கும்.

  1. b)மத்தியஅரசின்பொதுத்துறைநிறுவனங்கள், வங்கிகள்போன்ற வற்றில்பணிபுரியும், பிற்படுத்தப்பட்டோர், அவர்களது ஆண்டுவருமானம், ரூபாய் ஆறுலட்சத்தைத் தாண்டினாலும்,ஒபிசி சான்றிதழ்கிடைக்கும்.
  1. c)விவசாயவருமானம்ரூபாய் ஆறு லட்சத்தைத்தாண்டினாலும், அந்தபிற்படுத்தப்பட்டோரின்பிள்ளைகளுக்கு, ஓபிசிசான்றிதழ் பெறலாம்.

கிரிமி லேயர் (Creamy Layer-கிலே) முறை:

ஓபிசி சான்றிதழ்பெறுவதற்கு, கிரிமிலேயர்(Creamy Layer-கிலே) முறைமுக்கிய பங்கு வகிக்கிறது.கிரிமி லேயர் என்றால்பிற்படுத்தப்பட்டவர்களில்மேல்நிலையினர் -பொருளாதார சமூகவாய்ப்புபெற்றவர்கள் என்றுஅர்த்தம். இதன்படிபார்த்தால் ஓபிசி சான்றிதழ்பெறுவதற்கு,பெறுபவருடையபெற்றோரின் வருமானம்மட்டுமே கணக்கில் எடுத்துகொள்ளவேண்டும்.சான்றிதழ் பெறுபவரின்வருமானம் கணக்கில்வராது.

சான்றிதழை பெறும் நபரின்ஆண்டு வருமானம் ரூபாய் 6இலட்சத்திற்கு மேல்இருந்து அவரின்பெற்றோரின் வருமானம்ரூபாய் 6 இலட்சத்திற்குகுறைவாக இருந்தாலும்,அவர் அந்த சான்றிதழைபெற தகுதியானவர்தான்.

தமிழக அரசின் ஆணை:

ஓபிசி சான்றிதழ்பெறுவதற்கு,பிற்படுத்தப்பட்டோரின்ஆண்டு வருமானத்தைக்கணக்கிடும்போது, மாதச்சம்பளத்தைக் கணக்கில்எடுத்துக்கொள்ளக்கூடாது;

அதே போன்று, விவசாயவருமானத்தையும்கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என,தமிழக அரசு, ஆணைபிறப்பித்துள்ளது. இதனை,மத்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த ஆணையின்படி,பிற்படுத்தப் பட்டோரின்பெற்றோர், அரசின்பதவிகளில் இருந்தாலும்,வங்கி உள்ளிட்ட எந்தபொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்தாலும்,தனியார் நிறுவனங்களில்பணிபுரிந்தாலும்,அவர்களது, மாதச் சம்பளவருமானத்தை, கணக்கில்எடுத்துக் கொள்ளக் கூடாதுஎன்பதை, ஜாதி சான்றிதழ்வழங்கும் வட்டார அலுவலர்மற்றும் மாவட்டஆட்சியருக்கு, தமிழக அரசுஆணை பிறப்பித்துள்ளது.

ஓபிசி சான்றிதழக்கு எப்படிவிண்ணப்பிப்பது?

இதனைப் பெறுவதற்குமுதலில் தமிழக அரசுவழங்குகின்ற ஜாதிச்சான்றிதழைப் பெற்றிருக்கவேண்டும்.

ஜாதி சான்றிதழ் வழங்கும்,வட்டார ஆட்சியர்அலுவலகத்தில் அல்லதுஜெராக்ஸ் கடைகளில்ஓபிசி சான்றிதழ்பெறுவதற்குரியவிண்ணப்பம் கிடைக்கும்.அதனை பூர்த்தி (டைப்பிங்)செய்து, ஏற்கனவே தமிழகஅரசு வழங்கியுள்ள ஜாதிசான்றிதழ் நகலையும்,குடும்ப அட்டை நகலையும்,பள்ளி மாற்றுச் சான்றிதழ்நகலையும், வருமானச்சான்றிதழ் நகலையும்இணைத்திட வேண்டும்.

யாருடைய பெயருக்குசான்றிதழ் பெறவேண்டுமோ, அவரதுபெயருக்கு 20 ரூபாய்க்கானபத்திரம் வாங்கி, நோட்டரிபப்ளிக் வக்கீலிடம் அபிடவிட்பெற்று அதனையும்விண்ணப்பத்துடன்இணைக்க வேண்டும்.விண்ணப்பத்தைபெற்றோர் அல்லதுபாதுகாவலர்கையொப்பமிட்டு முதலில்கிராம நிர்வாக அலுவலர்அவர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

சாதாரணமாக நாம் ஜாதிச்சான்றிதழ் பெறுவதற்குவிண்ணப்பி்ப்பது போலவே,இதற்கும் வி.ஏ.ஓ, ஆர்.ஐ.மற்றும் தாசில்தாரிடம்கையொப்பம்பெறவேண்டும்.

அந்த விண்ணப்பப்படிவத்தில், பாரா 12-ல்வருமானம்/சொத்து பற்றியவிவரம் கேட்கப்படுகிறது.அதில் ஆண்டு வருமானம்என்பதில், மாதச்சம்பளம்மற்றும் விவசாயவருமானம் தவிர்த்து,என்றேகுறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த படிவம், www.persmin.gov.in என்றஇணைய தளத்தில்,OM and Orders என்கிற பகுதி யில், O.M. No.36012/22/93-Estt.(SCT),Date: 15.11.1993 என்கிறஅரசு ஆணையைபதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஆகவே, மாதச் சம்பளம்பெறுவோர், விவசாயிபோன்றோர், இந்தவிண்ணப்ப படிவத்தில்,வருமானம் என்ற இடத்தில்,மாதச்சம்பளம், அல்லதுவிவசாய வருமானம்என்பதை மட்டும்குறிப்பிட்டு, தமிழக அரசின்ஆணையின் நகலையும்இணைத்து,விண்ணப்பித்தால், ஓபிசிசான்றிதழ் நிச்சயம்கிடைக்கும்.

செல்லுபடியாகும் காலம்

இந்த ஓபிசி சான்றிதழ்,வருமானமும் சம்பந்தப்பட்டசான்றிதழ் என்பதாலும்,கிரிமிலேயர் என்கிற முறைஇருப்பதாலும், இந்த ஓபிசிசான்றிதழை ஒருஆண்டுக்குத்தான்பயன்படுத்தமுடியும்.

அதாவது, ஒரு ஆண்டின்,ஏப்ரல் மாதத்திலிருந்து,அடுத்த மார்ச் மாதம் வரை,இந்த ஓபிசி சான்றிதழ்பயன்படும். மேலும்,தேவைப்பட்டால், மீண்டும்அதே வட்டாரஅலுவலகத்தில்,புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.

தற்போது, வங்கி உள்ளிட்டமத்திய அரசின்நிறுவனங்களில், வேலைவாய்ப்பு மிக அதிகமாகஉள்ள நிலையில், வேலைவாய்ப்பில்பிற்படுத்தப்பட்டோருக்கானஇட ஒதுக்கீட்டு பயன்தங்களது பிள்ளைகளுக்குகிடைத்திட, பிற்படுத்தப்பட்டசமுதாயத்தைச் சேர்ந்தவிவசாய மக்களும்மாதச்சம்பளம்பெறுவோரும், இந்தவிவரங்களைப்பயன்படுத்தி, ஓபிசிசான்றிதழ் பெறலாம்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here