_*இன்றைய ராசி பலன்கள்👇🏾*_

_*பிப்ரவரி 25ம் தேதி 2019 இன்றைய மேஷம் முதல் மீனம் வரை 12*_

_*🐐மேஷம்🐐*_
*தியானமும், தம்மை அறிதலும் பலன் தரும். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். குடும்ப விவகாரம் மகிழ்வாகவும் ஸ்மூத்தாகவும் இல்லை. உங்கள் நிலையை துணைவர் புரிந்து கொள்ளும்படி செய்வதற்கு மிகவும் கஷ்டப்படுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். திருமண வாழ்வில் அதிக எதிர்பார்ப்பு இருந்தால் இன்று ஏமாற்றம் ஏற்படலாம்.*

_அதிர்ஷ்ட எண்: 2_
_*🌷🌷🌷🌷*_

_*🐂ரிஷிபா🐂*_
*மத மற்றும் ஆன்மிக நலன்களைப் பின்பற்ற இன்று நல்ல நாள். இன்றைக்கு உங்களிடம் வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலனை செய்யுங்கள் – ஆனால் அந்தத் திட்டங்களின் சாத்தியங்களை ஆய்வு செய்த பிறகே வாக்குறுதி கொடுங்கள். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியை காண நீங்கள் ரிலாக்ஸ் பண்ண முயற்சிக்க வேண்டும். உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் காதல் விவகாரத்தை சிக்கலாக்கிவிடலாம். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் துணை கொடுக்கும் இன்ப அதிர்ச்சியில் இன்று நீங்கள் குஷியாகிவிடுவீர்கள்.*

_அதிர்ஷ்ட எண்: 1_
_*🌷🌷🌷🌷*_

_*👫மிதுனம் ராசி*_
*நண்பரை தவறாகப் புரிந்து கொள்வதால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம் – எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு சமமாக விசாரிக்கவும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். பிறருடன் வாக்குவாதங்கள், மோதல்கள், தேவையில்லாமல் குற்றம் கண்டுபிடிக்கும் போக்கை தவிர்த்திடுங்கள். உங்கள் அழைப்பை இழுத்தடித்து பார்ட்னரை வெறுப்பேற்றுவீர்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். உங்கள் துணையின் பேச்சால் இன்று கோபமடைய கூடும். ஆனால் உங்கள் துணைவர்/துணைவி அதனை தன் அன்பால் சரி செய்து விடுவார்.*

_அதிர்ஷ்ட எண்: 8_
_
_*🌷🌷🌷🌷*_

_*🦀கடகம் ராசி🦀*_
*வெளிப்புற விளையாட்டு உங்களை ஈர்க்கும் – தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். நீங்கள் அக்கறை காட்டக் கூடியவருடன் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் இதயத்தை ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும். ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். பழைய சுவையான அனுபவங்களை இன்று அசை போட்டு மீண்டும் உங்கள் துணையுடன் இன்பமாக பொழுதை கழிப்பீர்கள்.*

_அதிர்ஷ்ட எண்: 3_
_*🌷🌷🌷🌷*_

_*🦁சிம்மம் ராசி🦁*_
*ஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் டானிக்காக இருந்து நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். குடும்பத்தினருடன் ரிலாக்ஸான நேரத்தை செலவிடுங்கள். இந்த நாள் உங்களுக்கு ரோஜாக்களின் நறுமணத்தை வழங்கும். காதலின் அற்புதத்தை உணர்ந்து மகிழுங்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். அன்பான தொடுதல், முத்தங்கள், அணைப்பு ஆகியவை இனிமையான திருமண வாழ்வில் அத்தயாவசிய விஷயங்களாகும். இவை அனைத்தையும் நீங்கள் இன்று உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 1
_*🌷🌷🌷🌷*_

_*🤷🏽‍♀கன்னி ராசி*_
*உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த கஷ்டப்படுவீர்கள் – வழக்கத்துக்கு மாறான நடத்தையால் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் குழப்பமாகி வெறுப்படைவார்கள். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. அது நல்ல அனுபவம். குழந்தையின் உடல்நலக் குறைவு உங்களை பிசியாக வைத்திருக்கும். நீங்கள் உடனடியாக கவனிக்க வேண்டியிருக்கும். சரியான அறிவுறை பெற்றிடுங்கள். நீங்கள் சற்று அலட்சியமாக இருந்தாலும் நிலைமை மோசமாகிவிடும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். உங்கள் மண வாழ்வில் இனிமையை கூட்டும் சிறந்த நாள் இது.*

_அதிர்ஷ்ட எண்: 8_
*🌷🌷🌷*

_*⚖துலாம் ராசி⚖*_
*உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது – அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். குழந்தையின் படிப்பைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இப்போது உங்களுக்கு சில பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் இவை தற்காலிகமானவை. காலப்போக்கில் இவை மறைந்துவிடும். உங்கள் துணைவரின் மனநிலை நன்றாக இருப்பதாகத் தெரியவில்லை என்பதால் விஷயங்களை முறையாகக் கையாளுங்கள். தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும். உங்கள் கடந்த கால ரகசியம் ஒன்றை அறிந்து உங்கள் துணை காயப்பட கூடும்.*

_அதிர்ஷ்ட எண்: 2_

_*🦂விருச்சிகம் ராசி🦂*_
*நீண்டகாலமாக உள்ள நோயில் இருந்து விடுபடுவீர்கள். ஆனால் சுயநலமான, முன்கோபியானவரை தவிர்த்திடுங்கள். அவர் உங்களுக்கு டென்சனை ஏற்படுத்தலாம். அது பிரச்சினையை பெரிதாக்கலாம். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சினை இருக்கும் – ஆனால் சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் தனிமையில் சிக்குவீர்கள். உங்கள் அன்புக்குரியவருக்கு உங்களின் நீடித்த காதல் ஆறு போல இருக்கும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். நீங்களும் உங்கள் துணையும் உங்கள் திருமண வாழ்கையிலேயே மிக சிறந்த நாளாக இந்த நாளை நினைவில் கொள்வீர்கள்.*

_அதிர்ஷ்ட எண்: 4_
_*🌷🌷🌷🌷*_

_*👤🐐🏹தனுசு ராசி*_
*ரிலாக்ஸ் செய்ய வாய்ப்பு கிடைக்கும் நாள். உங்கள் தசைகளுக்கு நிவாரணம் தருவதற்கு உடலுக்கு ஆயில் மசாஜ் செய்யுங்கள். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவரை புறக்கணித்தால் உறவு பாதிக்கப்படலாம். அவருடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியான பொன்னான நாட்களின் நினைவுகளை திரும்பக் கொண்டு வாருங்கள். காதலருடன் வெளியில் செல்லும்போது ஒரிஜினல் தோற்றம் மற்றும் நடத்தையுடன் இருங்கள். இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய – நிறைய பிரச்சினைகள் இருக்கும். வேலையில் இன்று உங்கள் சீனியர்கள் ஏன்ஜலை போல நடந்து கொள்வார்கள்.*

_அதிர்ஷ்ட எண்: 1_

_*🌷🌷🌷🌷*_

_*🐏🐟மகரம் ராசி*_
*நீங்கள் நீண்ட பயணத்துக்கு திட்டமிடுவதால், ஆரோக்கியமும், சக்தியை செலவிடாத குணமும் அதிக பயன் தரும். பிசியான பணி அட்டவணையிலும் நீங்கள் களைப்பை எளிதில் சமாளித்துவிடுவீர்கள். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். உங்களை தயார்படுத்திக் கொண்டு அதிகம் அனுபவிக்கும் செயலை செய்யுங்கள். நேரம், வேலை, பணம், நன்பர்கள், குடும்பம், உறவினர்கள்; எல்லோரும் ஒரு பக்கம் மற்றும் நீங்களும் உங்கள் துணையும் இன்னொரு பக்கம் காதலில் இன்று தன்னை மறப்பீர்கள். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். இன்று, மனதுக்கினியவருடன் பொழுதை கழிப்பது எத்தனை இன்பமானது என்பதை அறிவீர்கள்.*

_அதிர்ஷ்ட எண்: 1_
_*🌷🌷🌷🌷*_

_*🕺🏽கும்பம் ராசி*_
*வண்டி ஓட்டும் போது கவனமாக இருங்கள். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். நண்பர்கள் மூலமாக முக்கியமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று உங்கள் காதல் மலர்ந்து நீங்கள் என்ன நல்லது செய்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டும். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் தனிச்சிறப்பான நாளாக இருக்கும். இன்று மிக அசாதாரண விஷயம் ஒன்று நடக்கும்.*

_அதிர்ஷ்ட எண்: 7_
_*🌷🌷🌷🌷*_

_*🐟மீனம் ராசி🐠*_
*நீண்ட காலம் நிலுவையாக உள்ள பிரச்சினைகளை, உங்களின் வேகமான செயல்பாடு தீர்த்து வைக்கும். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். வீட்டு வேலை களைப்படையச் செய்யும், மன அழுத்தத்திற்கு அது முக்கிய காரணமாக இருக்கும். சிறிய பிரச்சினைக்கு கூட உங்கள் டார்லிங்குடன் உறவில் பிரச்சினை எழக்கூடும். பேசும்போது ஒரிஜினலாக இருங்கள், நடிப்பதால் எதுவும் கிடைக்காது. இன்று உங்கள் திருமண வாழ்வில் சிக்கலான நாள்.*

_அதிர்ஷ்ட எண்: 5_

 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here