பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2003, ஏப்., 1ம் தேதிக்கு பின், மாநில அரசுப் பணியில் சேர்ந்துள்ள பணியாளர்கள், பங்களிப்புடன் கூடிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பங்களிப்பாக, அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப் படுகிறது.அதற்கு சமமான பங்குத் தொகையை, அரசு செலுத்துகிறது. பங்களிப்பு வைப்புத் தொகை பிடித்தத்துக்கு உண்டான வட்டி விகிதம், காலாண்டுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது.இதன்படி, 2018 – 19ம் நிதியாண்டில், முதல் இரு காலாண்டுக்கான வட்டி விகிதம், 7.6 சதவீதமாக இருந்தது. மூன்றாவது காலாண்டுக்கான வட்டி விகிதம், 8 சதவீதமாக இருந்த நிலையில், ஜன., 1 முதல், மார்ச், 31ம் தேதி வரையிலான, நான்காவது காலாண்டு வட்டி விகிதத்தை, 8 சதவீதமாகவே பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை, அனைத்து வருவாய்த் துறை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here