10 மற்றும், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு பணிகள் தொடர்பான கையேட்டை அரசு தேர்வுகள் இயக்ககம், தேர்வு அலுவலர்களுக்கு வழங்கி உள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

# தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் அன்றைய பாடத்தை போதிக்கும் ஆசிரியர்களாக இல்லாததை உறுதி செய்ய வேண்டும்.

# அடையாள அட்டை இல்லாமல் யாரும் தேர்வு மையத்தில் பணிபுரிய கூடாது.

# வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

# பொதுவாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் காலையில் மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை விடப்படும். இந்தநிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மொழி பாடங்களுக்கான(தமிழ் மற்றும் ஆங்கிலம்) தேர்வு பிற்பகலில் நடைபெறுவதால் அந்த 4 தினங்களுக்கும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு முழு நாளும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

# தேர்வுகள் நடைபெறும்போது தேர்வு மைய பள்ளிகளில் கட்டிட பணியோ, பராமரிப்பு பணியோ நடைபெற கூடாது. இதுபோன்ற அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here