சென்னை தமிழக இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராவதற்காக 1 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.மாணவர்கள் மற்றும் வேலை தேடுவோருக்கு வழிகாட்டவும் போட்டி தேர்வுகளுக்கு இலவச வகுப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தவும் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு சிறு தொழில் நிறுவன அலுவலக வளாகத்தில் 1.31 கோடி ரூபாயில் மாநில தொழில் நெறி வழிகாட்டு மையம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியே திறந்து வைத்தார்.அத்துடன் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு உதவி செய்வதற்காக 1 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ள www.tamilnadu careerservices.gov.in என்ற இணையதளத்தையும் முதல்வர் துவக்கி வைத்தார்.பணி நியமன ஆணைதமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் 52 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here